கிரிக்கெட்வீரர் சச்சின், விஞ்ஞானி சிஎன்ஆர். ராவ் ஆகியோருக்கு பாரதரத்னா விருந்து வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் வாஜ்பாய்க்கும் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பரவலாக கருத்து உருவாகி வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் துணை நிலை ராணுவத்தினர் நடத்திய ரத்ததான முகாமில் ஜம்முகாஷ்மீர் மாநில தேசியமாநாட்டு கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வரும், மத்திய எரிசக்திதுறை மந்திரியுமான பரூக் அப்துல்லா கலந்து கொண்டார்.

அப்போது அவர், ”நான் பாஜக.,வை சார்ந்தவன் அல்ல. ஆனால், நான் ஒருஇந்தியன். வாஜ்பாய் ஒர் அற்புதமான மனிதர் என்பதில் யாரும் மறுக்கமுடியாது என்றே நான் நினைக்கிறேன்.

நான் இங்கு ஒன்று சொல்ல வேண்டும். வாஜ்பாய் மக்களவையில் முதல்முறையாக பேசியபோது, ஜவஹர்லால் நேரு அவரிடம் சென்றார். அப்போது, ஒருநாள் நீங்கள் நாட்டின் பிரதமராக வருவீர்கள் என்று சொன்னார். வாஜ்பாய் ஒரு நாள் பிரதமராகவருவார் என்று நேருஜி சொன்ன போது, ஒருவரும் அப்படி நடக்கும் என்று நினைத்திருக்க மாட்டார்கள்.

பாரத ரத்னா விருதின் பெருமையை விட வாஜ்பாய் மிகச் சிறந்த ஒரு மனிதராக இருக்கிறார். அவர் உடனடியாக மதிக்கப்படவேண்டும். இதற்காக நான் தனிப்பட்டமுறையில் அரசிடம் வேண்டுகோள் வைப்பேன்’ ‘என்று கூறினார்.

Leave a Reply