ரத்தகரை படிந்தகைகள் என்ற மோடியின்கருத்து அவமதிப்பு இல்லை என்று தேர்தல் ஆணையத்திடம் பாஜக தெரிவித்துள்ளது.

தேர்தல் பிரச்சாரகூட்டத்தில் பேசிய நரேந்திரமோடி காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கையில் ரத்த கறை படிந்தகைகள் என்று பேசினார். இந்தபேச்சில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல்சின்னமான கைசின்னத்தை அவமதிப்பது போல உள்ளது என்று அக்கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. மோடியின் தேர்தல் விமர்சனம் தேர்தல் விதிமீறல் என்று புகார் மனுவில் தெரிவித்த காங்கிரஸ் கட்சி மோடி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விலியுறுத்தியது.

இதற்கு விளக்கம் அளிக்குமாறு மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டிஸ் அனுப்பியது. இந்த நோட்டிஸ்-க்கு செவ்வாய் கிழமை பதில்அளித்த பாஜக இதில் அவமதிப்பு ஏதும் இல்லை என்று கூறியுள்ளது. காங்கிரஸ்கட்சியின் ஊழல்பற்றி குறிப்பிடவே மோடி அவ்வாறு குறிப்பிட்டார் என்று பாஜக தெரிவித்துள்ளது.

Leave a Reply