காங்கிரஸ் நாட்டுமக்களுக்கு, நம்பிக்கைதுரோகம் செய்துவிட்டது. அந்த கட்சியை, நாட்டிலிருந்து, அடியோடு அகற்றவேண்டும்,அந்தகட்சி, நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை என்று பாஜக., பிரதமர்வேட்பாளர், நரேந்திரமோடி பேசியுள்ளார்.

ம.பி., மாநில சட்ட சபை தேர்தலில் போட்டியிடும், பாஜக., வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசியதாவது: தொடர் ஊழல்களால், காங்கிரஸ்கட்சி, நாட்டு மக்களுக்கு துரோகம் செய்துவிட்டது. மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. மக்களுக்கு இடையே, பிரிவினையை ஏற்படுத்துவதை தவிர, வேறு எதையும், காங்கிரஸ் கட்சி செய்யவில்லை.

இந்த நாட்டை, 50 ஆண்டுகள், காங்கிரஸ் ஆட்சி நடத்தியுள்ளது. ஆனால், பழங்குடியின மக்களுக்காக, எதையும் செய்யவில்லை. வாஜ்பாய் தலைமையிலான, பாஜக., ஆட்சியில் தான், பழங்குடியினருக்கு, தனி அமைச்சகம் அமைக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியை, நாட்டிலிருந்து, அடியோடு அகற்றவேண்டும். அந்தகட்சி, நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை என்று , நரேந்திர மோடி பேசினார்.

Leave a Reply