பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவின்பேரில் பாஜக தலைவர்களின் தொலைபேசி உரையாடல் ஒட்டுக் கேட்கப் படுவதாக முன்னாள் துணைமுதல்வர் சுஷில் குமார் மோடி குற்றம் சுமத்தியுள்ளார்.

இதுகுறித்து பாட்னாவில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது

ஹாஜிபூரில் பாஜக தலைவர்களுடன் நான் செல்போனில் பேசியவிவரங்கள் முதல்வருக்கு தெரிந்திருக்கிறது. எங்கள் தொலை பேசிகளை ஒட்டுக்கேட்கப்படுவதற்கு இதைவிட வேறு ஆதாரம்தேவையில்லை. முதல்வர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய் வருகிறார். இந்த அளவுக்கு அவர் தாழ்ந்துபோவார் என நாங்கள் நினைக்கவில்லை என்று அவர் கூறினார்

Leave a Reply