பா.ஜ.க.,வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை தேர்தல் பிரசார மேடையிலேயே வைத்துத் தீர்த்துக்கட்ட சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக சிமி அமைப்பைச் சேர்ந்த எட்டுபேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் டெல்லி, கான்பூர், அம்பிகாபூர் ஆகிய இடங்களில் மோடி பேசவுள்ள இடங்கள் குறித்த வரைபடம் சிக்கியுள்ளது. எனவே இங்கு வைத்து மோடியை அவர்கள் தீர்த்துக் கட்டத் திட்டமிட்டிருக்க்லாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கடந்தமாதம் பீகார் தலைநகர் பாட்னாவில் அவர் கலந்துகொண்ட கூட்டத்தின்போது தொடர் குண்டு வெடிப்பு நடந்து பரபரப்பை ஏற்படுத்தியது. மோடியைக்கொல்லவே இந்த குண்டு வெடிப்பு நடந்தது என்றும் பின்னர் விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக சிலர் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மோடியை தீர்த்துக்கட்ட இந்தியன் முஜாஹிதின் மற்றும் சிமி அமைப்பு ஆகியவை கூட்டாக முயன்று வருவதாக புதியதகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கண்ட்வா சிறையிலிருந்து 7 சிமி தீவிரவாதிகள் தப்பியோடினார்கள். அவர்களில் அபித்மிர்சா என்ற தீவிரவாதி மட்டும் பிடிபட்டநிலையில் மற்ற 6 தீவிரவாதிகளும் தலைமறைவாகி விட்டனர்.

அந்த 6 தீவிரவாதிகளும் இந்தியன் முஜாகிதீன், சிமிதீவிரவாதிகளுடன் போய் சேர்ந்துவிட்டதாக உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இவர்கள் நரேந்திரமோடியை கொல்ல சதிதிட்டம் வகுத்து இருக்கிறார்கள்.

தேர்தல் பிரசாரம் செய்ய நரேந்திரமோடி வரும்போது அவரது கார் மீது, வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை மோதசெய்து நாசவேலை ஏற்படுத்த முதலில் தீவிரவாதிகள் திட்டமிட்டனர். ஆனால் மோடிகார் அருகே செல்லமுடியாது என்பதால் பிரசாரமேடை பகுதியில் அவரை கொல்ல தீவிரவாதிகள் திட்டமிட்டனர்.

தீவிரவாதிகளின் தொலை பேசி உரையாடல்களை இடைமறித்து கேட்டபோது, சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்கு வரும் மோடியை கொல்ல ரகசியதிட்டங்கள் தீட்டப்பட்டு இருப்பதை உளவுத் துறையினர் அறிந்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கடந்த ஒருவாரமாக சத்தீஸ்கர் மாநில போலீசார் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர்.

போலீசாரின் தீவிரவேட்டையில் ஷேக் அஜில்லா, மொகினூதீன் கியூரசி, அப்துல் வாகித்கான், உமர்சித்திக், ஷேக் ஹபிபுல்லா, ரோசன் ஷேக், ராஜு மிஸ்திரி உள்பட 8 சிமி தீவிரவாதிகள் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான வரைபடங்கள், ஆவணங்கள் சிக்கின.

மோடி பிரசாரம் செய்ய உள்ள பொதுக்கூட்டமேடை பகுதிகளின் வரைபடங்களை கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, மோடியை கொல்ல இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகளும் சிமி தீவிரவாதிகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது தெரிய வந்தது.

குறிப்பாக இந்தியன் முஜாகிதீன் அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவனான அப்துஸ்சுபான் கியூரசி என்ற தவூகீர் என்பவன் மோடியை கொல்லும் சதிதிட்டத்தின் பின்னணியில் இருப்பது தெரிந்தது. பாட்னா கூட்டத்தில் குண்டுவெடிப்பு நடத்திய தெக்சீன் அக்தார் என்பவன் டைம்பாம் செய்து கொடுத்து உதவி இருப்பதாக தெரிய வந்துள்ளது.

Leave a Reply