போலீசாரால் தேடப்பட்டுவரும் தீவிரவாதி அபுபக்கர்சித்திக் கோவை பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தனிப்படைபோலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

ஹிந்துமுன்னணி பிரமுகர் வெள்ளையப்பன், பா.ஜ.க.,வின் மாநிலச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் உள்ளிட்டோர் கொலை சம்பவங்களில் தொடர்புடைய தீவிரவாதிகள் போலீஸ்பக்ரூதின், பிலால்மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் சென்ற மாதம் ஆந்திர மாநிலம் புத்தூரில் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களுடன் தேடப்பட்டு வந்த அபுபக்கர்சித்திக் தலைமறைவாகவுள்ளான். இவனை பிடிக்கும் முயற்சியில் தமிழக காவல்துறை தீவிரமாக முயன்று வரும் நிலையில், அபுபக்கர்சித்திக் கோவை அல்லது கேரளமாநிலத்தில் பதுங்கியிருப்பதாக சிறப்புபுலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல்கிடைத்தது. இதைத்தொடர்ந்து கோவையில் சந்தேகமான சில இடங்களில் போலீசார் தேடுதல்வேட்டை நடத்தினர். அத்துடன் தனிப்படை போலீசார் கேரளமாநிலம் மலப்புரம் மாவட்டம் தோணிபாடா என்ற இடத்திற்கு விரைந்துள்ளனர்.

Leave a Reply