மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் எதிர்ப்பு அலைகளை மீறி பா.ஜ.க வெற்றிபெறும் , மாநில முதல்வர் செüஹான் மீது மக்கள்கொண்டுள்ள நம்பிக்கை எதிர்ப்பு அலைகளை சமாளித்துவிடும் என்று பாஜக பொதுச் செயலாளர் அனந்த்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அனந்த்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மாநிலத்தில் பல அமைச்சர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள் மீது எதிர்ப்பு அலைவீசுவதை நாங்கள் அறிவோம். அதனால்தான், தற்போதைய சட்டப் பேரவை உறுப்பினர்கள் 43 பேருக்கு தேர்தலில்போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. மாநில முதல்வர் செüஹான் மீது மக்கள்கொண்டுள்ள நம்பிக்கை எதிர்ப்பு அலைகளை சமாளித்துவிடும்.

முதல்வர் செüஹான் மீது மக்களுக்குள்ள மரியாதை, அவர் நடத்திய நல்லாட்சி, பல்வேறு வளர்ச்சிப்பணிகள் போன்ற காரணங்களால் மத்தியப்பிரதேச மாநிலத்தில் 3வது முறையாக பா.ஜ.க ஆட்சியை கைப்பற்றுவது உறுதி.பெரும்பாலான வாக்காளர்கள் பா.ஜ.க.,வுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்றார்.

Leave a Reply