புத்தகயை தொடர் குண்டு வெடிப்பு சம்பந்தமாக இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த தாசீன் அக்தர், ஹைதர் அலி மற்றும் சிலர் மீது பிகார் போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.

பாட்னாவில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி பங்கேற்ற பேரணியின் போது நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு தொடர்பாக ஏற்கெனவே அவர்கள் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே, சட்டத்துக்கு புறம்பானமுறையில் பாகிஸ்தானுடன் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக வியாழக் கிழமை அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரி ராஜ்பிந்து பிரசாத் தெரிவித்தார்.

அக்டோபர் 27ஆம்தேதி நிகழ்ந்த பாட்னா குண்டு வெடிப்பு மற்றும் ஜூலை 7ஆம் தேதி நிகழ்ந்த புத்தகயை குண்டுவெடிப்பு சம்பவங்களில் தாசீன் அக்தர் மூளையாக செயல்பட்டதாக கருதப்படுகிறார். இதனிடையே ஹைதர் அலி தலைமறை வாகியுள்ளார்.

Leave a Reply