மக்களவை தேர்தலில் பா.ஜ.க.,வுடன் கூட்டணிசேர மாநிலக் கட்சிகள் ஆர்வத்துடன் இருப்பதாக, பா.ஜ.க மாநிலத்தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

பூதப்பாண்டி அருகே துவரங் காட்டில் தோவாளை ஒன்றிய பாஜக சார்பில் பெரியவர்கள்சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் பாஜக. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசியதாவது:–

தமிழகத்தில் பாஜக.,வுடன் கூட்டணி அமைத்து பாராளுமன்றதேர்தலில் போட்டியிட பலகட்சிகள் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றன. தேர்தல்தேதி நெருங்கி வரும் போது கூட்டணி பற்றி முடிவுசெய்யப்படும்.

நரேந்திர மோடியை பிரதமர் ஆக்க வருகிற 1ந் தேதி முதல் 22ந்தேதி வரை தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 618 கிராம பஞ்சாயத்துகளில் வீடு, வீடாகச்சென்று பொதுமக்களை சந்திக்கும் நடைபயண பிரசாரம் நடைபெறும்.

அகஸ்தீஸ்வரம் தாலுகா தென்தாமரை குளம் பஞ்சாயத்தில் இருந்து எனது தலைமையில் 1ந் தேதி இந்த பிரசாரநடைபயணம் தொடங்கும். நரேந்திர மோடி பிரதமர் ஆக பாஜக தொண்டர்கள் உழைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

Leave a Reply