பெண் ஒருவரை வேவுபார்த்த சர்ச்சையில், குஜராத் முதல்வர் மோடியின்மீது அதிருப்தியிலுள்ள போலீஸார் மற்றும் அரசு அதிகாரிகளைக்கொண்டு அவரை வீழ்த்த காங்கிரஸ் சதிசெய்வதாக பாஜகவின் மூத்த தலைவர் அருண் ஜெட்லி குற்றம் சாட்டியுள்ளார்.

மோடியை வீழ்த்த, அவர்மீது அதிருப்தியிலுள்ள போலீஸார் மற்றும் அதிகாரிகளை கொண்டு அபத்தமான குற்றச் சாட்டுக்களை காங்கிரஸ் பரப்பிவருகிறது. இடை நீக்கம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ்பட் பொய்யான தகவல்களை கூறிவந்தார். அது தோற்றுப் போனதால், தற்போது இடை நீக்கம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரியான பிரதீப்சர்மாவை கொண்டு மோடியை வீழ்த்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மோடிக்கு இணையான தலைவராக ராகுல் காந்தியை நிலை நிறுத்துவதில் காங்கிரஸ் தற்போது பின் வாங்கி வருகிறது.

பா.ஜ.க.,வின் பிரதமர்வேட்பாளர் நரேந்திரமோடியை எதிர் கொள்வதில் காங்கிரஸ் மிகுந்தகுழப்பத்தில் உள்ளது. காங்கிரஸ் கட்சியினர் அவருக்கு எதிராக சிலசமயங்களில் தீவிரமாக செயல்படுகின்றனர். சில வேளைகளில் அவர் ஒருபொருட்டே இல்லை என்பது போல் நடிக்கின்றனர் என்றார் அருண்ஜெட்லி.

Leave a Reply