2013ஆம் ஆண்டிற்கான ‘டைம்ஸ்’ இதழின் சிறந்தநபருக்கான இறுதிப் பட்டியலில் பாஜக பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதல்வருமான நரேந்திரமோடியின் பெயர் இடம் பெற்றுள்ளது. பட்டியலில் இடம் பெற்ற ஒரே இந்தியர் நரேந்திர மோடி தான் என்பது இதில் குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டிற்கான ‘டைம்ஸ்’ இதழின் சிறந்தநபரை தேர்வுசெய்ய டைம்ஸ் இதழ் ஆன்லைனில் நடத்திய வாக்கெடுப்பில், இது வரை நரேந்திர மோடிக்கு 25% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிகிறது. 25% வாக்குகளுடன் மோடி முதலிடத்தில் இருக்கிறார் . ஆன்லைனில் பதிவான ஓட்டுகளின் அடிப்படையில் டைம்ஸ் இதழ் சர்வதேச தலைவர்கள், தொழில்முனைவோர், பிரபலமானவர்கள் என 42பேரை இறுதியாகப் பட்டியலிட்டுள்ளது. இந்த 42 பேரில், 2013ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த நபர்யார் என்பதை அடுத்தமாதம் அறிவிக்க இருக்கிறது.

இந்தப்பட்டியலில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ஜப்பான் பிரதமர் சின்ஷோஅபே, பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப்சாஹி, அமேசான் சிஇஓ. ஜெஃப் பெசோஸ் மற்றும் அமெரிக்க ராணுவ ரக்சியங்களை வெளியிட்ட எட்வர்ட்ஸ்நோடன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மோடிகுறித்து ஆன்லைனில் ஓட்டளிக்கும் இடத்தில் ” சர்ச்சைக் குரிய இந்து தேசியவாதி, குஜராத் மாநில முதல்வர், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டை ஆளும் காங்கிரஸ்கட்சியை பதவியிழக்க செய்யும் வேட்பாளராக கருதப்படுபவர்” என்று டைம்ஸ் இதழ் அறிமுகப்படுத்தியுள்ளது.

Leave a Reply