அஸாமில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிய முதல்வர் தருண்கோகோய் அரசை நீக்கிவிட்டு குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என பா.ஜ.க தேசிய துணைத்தலைவர் பிஜோய சக்கர வர்த்தி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அக்கட்சியின் தேசிய துணைத்தலைவர் பிஜோய சக்கர வர்த்தி செய்தியாளர்களிடம் செவ்வாய்க் கிழமை கூறியதாவது:

அஸாம் மாநிலத்தில் கடந்த மூன்று வருடங்களாக முதல்வர் தருண்கோகாய் தலைமையில் நடைபெற்று வரும் ஆட்சியில் மாநிலசட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து போய்யுள்ளது. கொலை சம்பவங்களும், ஆள் கடத்தல் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இதை கட்டுப்படுத்துவதில் மாநிலஅரசு தோல்வி அடைந்துள்ளது.

அஸாமில் மாவோயிஸ்ட்டுகளின் செயல்பாடு நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இதேநிலை நீடித்தால் ஜார்க்கண்ட், ஆந்திரப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களைப்போல் அஸாமிலும் மாவோயிஸ்ட்டுகளின் ஆதிக்கம் அதிகரித்து விடும்.

அஸாமில் அமைதியான சூழ்நிலை நிலவவில்லை என்று பிரதமர் மன்மோகன்சிங்கும், முதல்வர் தருண் கோகாயும் ஒப்பு கொண்டுள்ளனர். ஆகையால், தருண்கோகோய் அரசை நீக்கிவிட்டு குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்தியஅரசு பரிந்துரை செய்யவேண்டும் என்றார் சக்கரவர்த்தி.

Leave a Reply