தமிழகத்தில் தேர்தல்கூட்டணி பாஜக.,வை சார்ந்தே அமையும் , எந்த கட்சியையும் நம்பி, பாஜக, இல்லை' என்று , பரமக்குடியில் நேற்றுநடந்த மாநில செயற் குழு கூட்டத்தில், மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பரமக்குடியில் நேற்று தொடங்கிய பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் மேலும் பேசியதாவது ;

திருச்சியில் நடந்த "இளந்தாமரை' மாநாட்டிற்குபின், கட்சியில் உற்சாகம் எழுந்துள்ளது. இம்மாநாடு வெற்றி, தமிழகம் மட்டுமின்றி, நாடுமுழுவதும் பெரிய எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் பெரியஅரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

பல அரசியல் கட்சிகளின் பார்வை, பாஜக., மேல் விழுந்துள்ளது. துவக்கத்தில் இரண்டு சதவீதமாக இருந்த ஓட்டுவங்கி, தற்போது 10 சதவீதமாக உயர்ந்துள்ளது. அரசியல் வாதிகளின் பார்வையில், 15 சதவீதத்தை எட்டியுள்ளது. டிச.,8ம் தேதிக்குள் ஐந்துமாநில தேர்தல்முடிவுகள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. டில்லியில் பா.ஜ.க, வெற்றிபெறும், காங்கிரஸ் ., மூன்று அல்லது நான்காவது இடம் அல்லது அதற்கும்கீழே தள்ளப்படும்.

பரமக்குடி பாஜக.,வின் கோட்டை. பரமக்குடியில் பாஜக., முன்னாள் கவுன்சிலர் முருகன் மார்ச் 19ல், கொல்லப்பட்டார். இதை மூடிமறைக்கும் வகையில் வழக்கை, போலீஸ் திசைதிருப்பி உள்ளது. ஆனால், பயங்கரவாதிகள், தாங்களே கொலைசெய்ததாக ஒப்புக்கொண்டனர். ஆகவே, உயர்போலீஸ் அதிகாரிகள் கூறிய அனைத்து தகவல்களும் பொய்யாகி உள்ளது . தமிழகத்தில் 24 மாவட்டங்களில், 604 மண்டலங்களில், பாஜக., முழுவளர்ச்சி அடைந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில், 68 ஆயிரத்து 900 உறுப்பினர்களை கொண்டு முதலிடத்தில் உள்ளது. காஞ்சிபுரம் இரண்டாவது, திருவள்ளூர் மூன்றாவது இடத்தைபிடித்துள்ளது. ஒருமாதத்திற்குள், ஒன்றரை லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட உள்ளனர். நாளை (நவ.28) அரசியல் சூழல்குறித்தும், தேர்தல்யுக்திகள் குறித்தும் ஆலோசிக்க உள்ளோம்.

தமிழகத்தில் எந்த கட்சியையும் நம்பி பாஜக., இல்லை. பாஜக.,வை சார்ந்து தான் கூட்டணி அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. வரும் லோக்சபாதேர்தலில், நமது சொந்த பலத்துடன் ஆட்சி அமையும், என்றார்.

Leave a Reply