சங்கரராமன் கொலைவழக்கில் காஞ்சி சங்கராச் சாரியார் கடவுளின் ஆசீர்வாதத்தால் விடுதலை செய்யப் பட்டிருப்பதாக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் , மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான சுஸ்மா ஸ்வராஜ் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.

காஞ்சிபுரம் சங்கரராமன் கொலைவழக்கில் சங்கராச்சாரி ஜெயேந்திரர் உட்பட 23பேரை புதுச்சேரி நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்நிலையில் தமது ட்விட்டர்பக்கத்தில் கடவுளின் ஆசீர்வாதத்தால் சங்கராச் சாரியார் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டிருக்கிறார் சுஸ்மாஸ்வராஜ். சங்கரராமன் கொலைவழக்கில் சங்கராச் சாரியார் பொய் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதை பாஜக ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply