திரு கபில் சிபில், தான் எப்போதும் தெஹல்காவில் பங்குகளுக்கு விண்ணப்பிக்கவில்லை என்றும், "கருத்து சுதந்திரத்தை காக்கும் பொருட்ட" தான் தெஹல்கா நிறுவனத்திற்கு ரூபாய் 5 இலச்சம் நன்கொடை அளித்ததாகவும் கூறினார்.

தன் நிறுவனதின் மேல் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அடக்குமுறை நடத்திய போது தேஜ்பால் தன்னிடம் வந்து உதவி கேட்டதால் ரூபாய் 5 இலச்சத்திற்கு காசோலை தான் கொடுத்ததாகவும் நினைவு கூர்ந்தார்.

"அவர் பலரிடம் சென்று உதவி கேட்டார், அதுபோல் என்னிடமும் வந்து உதவி நாடினார், மற்றபடி எனக்கு அவரை எனக்கு தெரியாது" என்றும், தான் கொடுத்தது நன்கொடை மட்டுமே, மாறாக பங்குகளுக்கான தொகை இல்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும் தான் ஒரு பத்திரிகை தொடங்க என்னிடம் ஆதரவு கேட்டார் நானும் "கருத்து சுதந்திரத்தை தான் பாதுகாத்தேன்" அதன் படியே நான் தெஹல்கா நிறுவனத்தின் "தொடக்க உறுப்பினர்" (founder member ) ஆனேன். அது அல்லாமல் நான் பங்குகளுக்கு விண்ணபிக்கவே இல்லை என்று தெரிவுத்தார்.

தேஹல்கா நிறுவனத்தின் ஆவணங்களில் கபில் சிபில் ஒரு பங்குதாரர் என்று இருப்பதை சுட்டிக் காட்டிய போது, அது தேஜ்பால் செய்து இருப்பார் என்றும் தான் அதைப் பற்றி கவலை கொள்ளப் போவது இல்லை என்றும் கூறினார். மேலும் பங்குகளை ஒருவருக்கு அளிக்க சட்டம் இருக்கிறது, அதன் படி நான் பங்குகளுக்கு விண்ணப்பித்து இருக்க வேண்டும், ஆனால் நான் விண்ணப்பிகாத போது அது அதிகாரப்பூர்வமாக எனக்கு ஒதுக்கபடவில்லை என்றாகும் என்றார்.

மேலும் துருவிக் கேட்டப்போது ஒரு வாதத்திற்கு நான் பங்குதாரர் என்றே கொண்டாலும், அந்த அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவர் செய்த தவறுக்கு நான் எப்படி பொறுப்பு ஏற்றக முடியும் என்று கேட்டார்.

|||| இங்கே ஒரு கேள்வி, முதலில் அவர் யார் என்றே தெரியாது என்றார், பின்னர் அப்படி யார் என்றே தெரியாதவருக்கு 5,00, 000 நன்கொடை (வெள்ளைப் பணம் மட்டுமே, கருப்பு எத்தனை என்று ஆண்டவனுக்கே வெளிச்சம்) கொடுத்தார். தான் பங்குதாரரே இல்லை என்றார், பின்னர் அது தேஜ்பால் செய்தது என்கிறார். தேஜ்பாலோ எங்கள் பத்திரிக்கை காங்கிரசின் பத்திரிக்கை இல்லை என்று பல முறை முன்னர் கூறியுள்ளார் ஆனால் இப்பது கபில் சிபில் அதில் பங்குதாரர். என்ன தான் நடக்கிறது ? |||||

Leave a Reply