நரேந்திர மோடியை தாக்குவதற்காக காங்கிரஸ்கட்சி தவறான தகவல்களை வெளியிட்டுவருகிறது. நாடுமுழுவதும் மோடிக்கு வளர்ந்துவரும் செல்வாக்கை கண்டு பொறாமையால்தான் காங்கிரஸ் கட்சி இதுபோன்ற நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. என பா.ஜ.க குற்றம் சாட்டியுள்ளது.

பாஜக.,வின் செய்திதொடர்பாளர் பிரகாஷ் ஜவ்டேகர் இது குறித்து மேலும் கூறியதாவது, காங்கிரஸ் கட்சியினர், பா.ஜ.க.,வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை குறி வைத்து தாக்கிபேசி வருகின்றனர். இதற்காக அந்த கட்சித்தலைவர்கள் தவறான தகவல்களை வெளியிடுகின்றனர்.

கபில்சிபல் உள்ளிட்ட தலைவர்கள் மோடியை தாக்குவதற்காக குஜராத் குறித்தும், நரேந்திரமோடி ஆட்சியைப்பற்றியும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். இது குறித்து நாங்கள்கேட்ட கேள்விகளுக்கு கபில்சிபல் எந்த விளக்கத்தையும் தரவில்லை. இதற்காக அவர் 32பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதிலிருக்கும் புள்ளி விவரங்கள் அனைத்தும் தவறானவை. நாடுமுழுவதும் மோடிக்கு வளர்ந்துவரும் செல்வாக்கை கண்டு பொறாமையால்தான் காங்கிரஸ் கட்சி இதுபோன்ற நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. கபில்சிபல் குற்றம் சாட்டுவதற்கு முன்பாக நன்றாக ஆலோசித்து அறிக்கைகளை வெளியிடட்டும்.

காங்கிரஸ் ஆட்சிசெய்யும் எந்த மாநிலத்திலாவது 24 மணி நேரம் மின்சாரம், கடந்த பத்து ஆண்டுகளில் 10 சதவீதவளர்ச்சி உள்ளது என்று கபில்சிபலால் திட்டவட்டமாக கூறமுடியுமா? குஜராத், மோடியின் ஆட்சியில் வளர்ந்தமாநிலமாக மாறிவருகிறது. குஜராத்தில் மட்டும்தான் ஒருங்கிணைந்த வளர்ச்சி 14 சதத்தை எட்டியுள்ளது. வேலை இல்லாதிண்டாட்டம் ஆயிரத்தில் ஒருவருக்கு என குறைந்துள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply