நதிநீர் பகிர்வு பிரச்சினைகளுக்கு காங்கிரஸ்சின் பிரித்தாளும் சூழ்ச்சியேகாரணம், இதுபோல் காங்கிரஸ்கட்சி செய்யும் பாவங்களால் தான் மக்கள் பெரும்துயரங்களை அனுபவித்து என குஜராத் முதல்வர் நரேந்திரமோடி குற்றம் சுமத்தியுள்ளார்.

ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சுமர்பூர் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரக்கூட்டத்தில் பேசியதாவது:

நதிநீர்பகிர்வு தொடர்பாக பல்வேறு மாநிலங்களுக்கு மத்தியில் பிரச்சினைகள் நீடிக்கின்றன. இதற்கு மத்தியில் ஆளும்காங்கிரஸே காரணம். பிரித்தாளும் சூழ்ச்சியையே காங்கிரஸ் கடைப்பிடிக்கிறது. இதனால் சகோதரர்கள், ஜாதிகள், சமூகங்களுக்கு இடையே அந்தக்கட்சி பிளவை ஏற்படுத்துகிறது.

நர்மதை நதி நீரில் ராஜஸ்தான் மாநிலத்துக்கு போதிய பங்குகிடைப்பது இல்லை. அதற்கு மத்திய அரசேகாரணம். சர்தார்சரோவர் அணை மதகுகள் திட்டத்தை மத்திய அரசு வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருகிறது. அந்தப்பணி நிறைவடைந்தால் ராஜஸ்தான் மாநிலத்துக்கு நர்மதை நதியிலிருந்து கூடுதல் தண்ணீர்கிடைக்கும். ஆனால், இந்தவிவகாரத்தில் மத்திய அரசு அரசியல் சித்து விளையாட்டுகளை நடத்திவருகிறது.

ஆந்திரத்தை பிரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த விவகாரத்தால் சீமாந்திரா, தெலங்கானா பிராந்தியங்கள் பற்றிஎரிகின்றன. இந்த இருபிராந்தியங்களுக்கும் இடையே இப்போது நதி நீர் பிரச்சினை தலைதூக்கியுள்ளது. இதுபோல் காங்கிரஸ்கட்சி செய்யும் பாவங்களால் தான் மக்கள் பெரும்துயரங்களை அனுபவித்து வருகிறார்கள்.

பா.ஜ.க.,வை பொறுத்த வரை வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாககொண்டு செயல்படுகிறது. குஜராத் இன்று அமோகவளர்ச்சி அடைந்திருக்கிறது. அதற்கு நான் காரணம் அல்ல. பா.ஜ.க ஆட்சியைத்தேர்ந்தெடுத்த மக்கள் தான் காரணம்.

அதே போல் ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.,வுக்கு மக்கள் வாக்களித்தால் இந்தமாநிலம் அமோக வளர்ச்சிபெறும். காங்கிரஸ் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பேசுவது இல்லை. மக்களுக்கு இலவசங்களை அறிவித்து ஏமாற்றிவருகிறது.

பாலிபகுதி மக்கள் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டால் ராஜஸ்தானில் சிகிச்சைபெறுவது இல்லை. அதற்கான வசதிகளும் இங்கு இல்லை. அதனால் தான் அருகில் உள்ள குஜராத்துக்கு வருகிறார்கள்.

ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தால் பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும் என்று 2009 மக்களவை தேர்தலின் போது காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. ஆனால், இதுவரை பண வீக்கம் குறையவில்லை என்றார் நரேந்திரமோடி. ஜோத்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரசாரக்கூட்டங்களிலும் மோடி பங்கேற்றார்.

Leave a Reply