புதுடெல்லி சட்ட சபைத் தேர்தல் அடுத்தவாரம் நடைபெற உள்ள நிலையில், அங்கு பா.ஜ.க.,வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். முதல்வர் ஷீலாதீட்சித் போட்டியிடும் புதுடெல்லி தொகுதியில் நாளை பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தி மோடியை உரையாற்றவைக்க ஏற்பாடுசெய்தனர்.

இதற்காக அனுமதிகேட்டு டெல்லி முனிசிபல் கவுன்சிலுக்கு பா.ஜ.க கடிதம் அனுப்பியது. ஆனால், பா.ஜ.க அனுமதிகேட்டு பரிந்துரை செய்திருந்த 4 இடங்களிலும் பாதுகாப்பு காரணங்களுக்கா க பொதுக்கூட்டம் நடத்த முனிசிபல்கவுன்சில் அனுமதிமறுத்தது.

டெல்லியில் திட்டமிட்ட 4 இடங்களிலும் அனுமதி கிடைக்காததால், ஷாகத்ரா, சுல்தான்பூரி மஜ்ரா மற்றும் சாந்தினிசவுக் உள்ளிட்ட இடங்களில் நரேந்திரமோடி நாளை உரையாற்றுவார்.

15 ஆண்டுகளாக டெல்லி முதல்வராக இருக்கும் ஷீலாதீட்சித்தை எதிர்த்து இந்தமுறை அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுகிறார். கெஜ்ரிவாலுக்கு மிகப் பெரிய வெற்றிகிடைக்கும் என்று சமீபத்திய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply