கால்நடைதுறையின் மோசமான செயல்பாடுகளே கோமாரி நோய் தாக்குதலுக்கு காரணம் என்று பாஜக மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது பத்திரிகை செய்தியில் மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது; கோமாரி நோய் தாக்குதலினால் தமிழ்நாடு முழுவதும் லட்சகணக்கிலே கால்நடைகள் மடிந்து வருகிறது. இதனால் விவசாயிகள் படும் இன்னல்கள் அளவிட முடியாத அளவிற்கு உள்ளது.

பொதுவாக இந்நோய் வாய் மற்றும் கால்களில் ஏற்படுகிறது. குறிப்பாக அகஸ்டு முதல் இந்நோய் தாக்குதல் தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் ஏற்படுகிறது. ஆனால் இந்த வருடம் மிக பெரிய அளவில் இந்நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. கால்நடை துறை சரியான முன்னேற்பாடுகளை எடுக்கவில்லை குறிப்பாக நோய் தடுப்பு மருந்துகள் சரியான முறையில் பராமரிப்புடன் கால்நடை மருத்துவ மையங்களுக்கு அல்லது கிராமங்களுக்கு எடுத்து செல்லப்படவில்லை இதனால் தடுப்பு மருந்துகள் வீரியம் இழந்து வேலை செய்யவில்லை தமிழக அரசும் விவசாயிகளுடைய பாதிப்புகளுக்கு இது வரையிலும் சரியான முறையில் அணுகவில்லை.

கிராமங்களில் விவசாயமே பொய்த்து விட்டாலும் ஒருபசுமாடு ஒரு குடும்பத்தை காப்பாற்றும் அளவிற்கு தினசரி வருமானத்தை ஈட்டி தரும்.

நல்ல தரமான கறவை மாடு இன்றைய நிலையில் சுமார் 75000ஃ-ரூ வரை விலையாகிறது. கலப்பின கறவை மாடு சுமார் 50,000ஃ-ரூ வரை விலை நிர்ணயிக்கபடுகிறது. கோமாரி நோயால் கால்நடைகளை இழந்து வாடும் குடும்பங்களை காப்பாற்ற வேண்டியது தமிழ்க அரசின் தலையாய கடமையாகும். எனவே பாதிக்கப்பட்ட உயிரினங்களை இழந்துவாடும் குடும்பங்களுக்கு போர்கால அடிப்படையில் நோய் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு கறவை மாடுகளுக்கும் அதன் இழப்போடு புதிய கறவைமாடு வரும் வரை உள்ள செலவு உள்பட குறைந்த பட்சமாக ரூ.1 லட்சம் உழவு மாடுகளுக்கு ரூ.30,000ஃ-ம்; மற்றும் ஆடுகளுக்கு ரூ.15,000ஃ-ம் உடனடியாக வழங்க வேண்டும். மேலும் நோய் பாதிக்கபட்ட கால்நடைகள் காப்பீடு செய்யப்படவில்லை என்றாலும் தமிழக அரசாங்கம் இழப்பீட்டுதொகையை போர்கால அடிப்படையிலே வழங்க வேண்டும்.

கால்நடைதுறையின் மோசமான செயல்பாடுகளினால் தான் இன்றைய தினம் தமிழக விவசாயிகள் சொல்ல முடியாத துயரை அனுபவித்து கொண்டிருக்கிறார்கள்.

நோய் பாதிகப்பட்ட உயிரிழந்த கால்நடைகளை உடனடியாக அப்புறபடுத்தி எரிய+ட்ட அரசாங்கம் அனைத்து உதவிகளையும் செய்து தரவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply