தமிழக பாஜக.,வின் மாநில செயற்குழு கூட்டம் பரமக்கூடியில் நடைபெற்றது, இதில் காமன்வெல்த் மாநாடு, இந்திய தமிழ் மீனவர்கள், பூரண மதுவிலக்கு, இளைஞர் நலம், விஞ்ஞான வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

1.காமன்வெல்த் மாநாடு

இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் என்ன பேசப்போகிறோம் என்பதை பிரிட்டீஷ் பிரதமர் முன் கூட்டியே அறிவித்துவிட்டு அது போலவே இலங்கையில் நடந்து கொண்டார் என்பது ஆறுதல் அளிக்கிறது. அது போலவே தானும் இலங்கை சென்று தமிழர்கள் நலன் குறித்து பேசுவேன் என நமது பிரதமர் உறுதிபட பேசாமல் மௌனம் சாதித்தார். அவரால் அங்கு சென்று எதுவும் பேச இயலாது என்பதை உணர்ந்தே அவர் போகக்கூடாது என தமிழ்நாடு பா.ஜ.கவும் வலியுறுத்தியது. உண்மையில் காமரூன் செய்த செயலை பாரதம் சாதாரண நாளிலேயே செய்திருக்க வேண்டும். இனியாவது மத்திய அரசு இலங்கை தமிழர் பாதுகாப்பு, சமஉரிமை, மறுவாழ்வு ஆகியவற்றை பெற்றுத்தர தீவிரம் காட்ட வேண்டுமென இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

2. இந்திய தமிழ் மீனவர்கள்

தமிழ்மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவதும். சித்திரவதை செய்யப்படுவதும், உயிரிழப்புகளும் தொடர்கதையாகி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் கூட்டணி அரசு இத்தகு இலங்கை அரசின் கொடுஞ்செயலுக்கு எவ்வித தக்க எதிர் நடவடிக்கையும் எடுக்காததோடு, இந்த மனித உரிமை மீறல் பற்றி நடந்து முடிந்த கமான்வெல்த் மாநாட்டிலும்கூட,நமது வெளியுறவு அமைச்சர் எவ்விதக் குரலும் கொடுக்காதது வேதனையளிக்கிறது. மத்திய அரசின் பாராமுகப் போக்கினை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

மேலும், நமது கடற்கரையிலிருந்து மிக அருகாமையில் உள்ள கச்சத்தீவுப் பகுதியில் கூட இலங்கைக் கடற்படை, நிலை அமைத்துக் கொண்டு, நமது மீனவர்களை துன்புறுத்தியும் சுட்டுக்கொன்றும் வருகிறார்கள். இதற்கு நிரந்தரத்தீர்வாக, ஏற்கனவே ராமநாதபுரம் சமஸ்தானத்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த, நமது நாட்டின் ஒரு பகுதியாக இருக்கின்ற, நம்மால் இலங்கைக்கு விட்டுக்கொடுக்கப்பட்ட கச்சத்தீவின் உரிமையை முழுமையாக மீட்டெடுக்க வேண்டுமென மத்திய அரசினை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

3. பூரண மதுவிலக்கு

"மது குடிப்பது நாட்டுக்கும், வீட்டுக்கும், உடல்நலத்துக்கும் கேடு" என்கிற பசப்பு வார்த்தைகளின் விளம்பரத்தோடு, அரசே மதுக்கடைகளை நாடு முழுக்கத்திறந்து வைத்துக்கொண்டு, மக்களைக் குடிக்க வைத்து சீரழிப்பது வெட்கக்கேடானது. மேலும் தீபாவளிப்பண்டிகைக்கு 3 நாட்களில் ரூ.350 கோடி என விற்பனை வரம்பு நிர்ணயித்து விற்றிருப்பது வெட்கக்கேடானது கண்டிக்கத்தக்கதாகும். பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால் மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்த வருமானம் இல்லாமல் போய்விடும் என்றும், கள்ளச்சாராயம் பெருகும் என்றும், தமிழக அரசால் வாதிடப்படுகிறது. ஆனால் குஜராத் மாநிலத்தில் திரு.நரேந்திரமோடி அவர்கள் வெற்றிகரமாக பூரண மதுவிலக்கை அமல்படுத்திக்கொண்டு, அம்மாநில மக்களின் அனைத்து நலத்திட்டங்களையும் வெற்றிகரமாக அமல்படுத்தி வருகிறார். அதுபோல நாடு முழுக்க பூரணமதுவிலக்கை அமல்படுத்திட வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

4.பயங்கரவாத குற்றவாளிகளை முழுவதும் களையெடுக்க

நமது கட்சியின் மருத்துவஅணி மாநிலச்செயலாளர் னுச.திரு.அரவிந்தரெட்டி, கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் திரு.ரமேஷ், இந்து முன்னணி மாநிலச்செயலாளர் திரு.வெள்ளையப்பன் ஆகியோர்களின் படுகொலையை திட்டமிட்டு நடத்திய குற்றவாளிகளில் எஞ்சியுள்ளவர்களையும் உடனடியாக கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கவும், இத்தகு பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் அனைத்து பயங்கரவாத இயக்கங்களையும் தடை செய்வதோடு, வௌ;வேறு புதுப் புதுப்பெயர்களில் இயங்கிவரும் அனைத்து பயங்கரவாதிகளையும் களையெடுத்து நாடு அமைதிப்பூங்காவாகத் திகழ அரசு காலந்தாழ்த்தாது ஆவண செய்ய வேண்டும். மேற்படி கொலைப்பிண்ணனி மற்றும் இவை தொடர்பான திரு.அத்வானி ரதயாத்திரைப் பாதையில் குண்டுவைத்தது போன்ற குற்றப்பின்னணியில் சம்பந்தப்பட்டவர்களை, கடமை உணர்வோடு செயல்பட்டு கைது செய்த காவல்துறையின் அனைத்து அமைப்பினரையும் இச்செயற்குழு பாராட்டுகிறது. நமது மாநிலத்தலைவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க மேற்படி அதிகாரிகளுக்கு பரிசத்தொகையை ரூ.5 லட்சம் என உயர்த்திக்கொடுத்த மாநில அரசை பாராட்டுகிற அதேவேளையில், விடுபட்ட அனைத்து காவல்துறை அதிகாரி காவலர்களுக்கும், அதே அளவு பரிசுத்தொகையும் பதவி உயர்வும் வழங்கிட (தமிழக முதல்வர் அவர்களை) கேட்டுக்கொள்கிறோம்.

5.இளைஞர் நலம், விஞ்ஞான வளர்ச்சி பற்றி

"பாரத ரத்னா" விருது பெற்ற விஞ்ஞானி னுச.ஊNசு.ராவ் அவர்கள், நம்நாட்டில் இயற்கை விஞ்ஞான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி (சுநளநயசஉh ரூ னுநஎநடழிஅநவெ) -க்கு அரசு முக்கியத்துவம் அளிக்காதது முட்டாள்தனமானது எனக்கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. நமது முன்னாள் பிரதமர் "திரு.வாஜ்பாய்" அவர்களின் பொற்கால ஆட்சியில் தான் உள்நாட்டின் விஞ்ஞான வளர்ச்சிக்கும் உள்கட்டமைப்புக்கும், தொழில்நுட்ப அறிவியில் கல்விக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தொழில்நுட்பத் துறையில் 30மூ வளர்ச்சி பெற்றோம். ஆனால் 9½ ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் அதுவே 9மூ ஆக குறைந்து விட்டது.

எனவே, தகவல் தொழில் நுட்பம், இயற்கைவிஞ்ஞான வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிற வகையில் நிதி ஒதுக்கீடு செய்வதோடு, இளைஞர்களுக்கு இயற்கைசார் அறிவியல் கல்வி கற்கவும், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பற்றிய கல்வி கற்கவும், ஊக்கமும், ஆக்கமும் அளிக்கின்ற வகையில் புதிய அரசுசார் கல்வி, மேற்படிப்பு மையங்கள் துவங்கப்பட வேண்டும். படித்த அனைத்து இளைஞர்களுக்கும் மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பு வசதியை அரசே இலவசமாக வழங்கவேண்டும். அனைத்து இளைஞர்களுக்கும் தொழிற்கல்விற்காகவும், வேலைவாய்ப்பு வசதியையும் அரசு வழங்கிட முன்வரவேண்டும்.

6. மீத்தேன் வாயு

ஆட்சியில் உள்ள மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிலக்கரி, இரும்புத்தாது உள்ளிட்ட நமது கனிமவளங்களையும், அலைக்கற்றை (2பு) உள்ளிட்ட நமது தொழில் நுட்ப வருவாய்களையும் கொள்ளையடித்து முடித்து விட்டது. தற்போது காவிரி டெல்டா மாவட்டங்களிலும். நெய்வேலி நிலக்கரிச்சுரங்கப்பகுதியிலும் 1½ லட்சம்; ஏக்கர் பரப்பில், 600, 700 மீட்டர் ஆழத்தில் உள்ள மீத்தேன் வாயுவை அன்னிய நிறுவனங்களோடு கூட்டணி அமைத்துக்கொண்டு, புசநயவ நுயளவநசnஇ நுநெசபல ஊழசிழசயவழைn நிறுவனத்துக்கு உரிமம் வழங்கி கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அவ்விதம் பூமியின் ஆழத்தில் இயற்கையாக உள்ள மீத்தேன் வாயுவை தோண்டி எடுப்பதால். தஞ்சை நாகை, திருவாரூர், கடலூர் மாவட்டங்களின் புவியியல் இயற்கை நிலைப்பாடு மாறி பல்வேறு இயற்கை பேரிடர்கள்,(யேவரசயட ஊயடயஅவைல) ஏற்படுவதோடு, நிலத்தடி நீர் வறண்டு போய் காவிரி டெல்டா பகுதி பாலைநிலமாக மாறிவிடும் என்றும், மேற்படி மாவட்டங்களில் விவசாயம் செய்யமுடியாமல் சுமார் 1 கோடி மக்களின் வாழ்விடம் பறிபோய்விடும் என்றும், இயற்கை வேளாண்விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். விவசாயிகளும் போராடி வருகின்றனர். எனவே மத்திய அரசானது மேற்படி மீத்தேன் எடுக்கும் திட்டத்தை கைவிடவேண்டுமென இச்செயற்குழு கண்டிக்கிறது.

7. விவசாயத் தீர்மானம்

தமிழக அரசின் தவறான கொள்கை முடிவுகளால், தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் நஷ்டத்தில் இயங்குவதாக கணக்குச் சொல்லப்பட்டும், விவசாயிகளுக்கு கரும்பு அளித்தமைக்கான பணப்பட்டுவாடா கோடிக்கணக்கில் வழங்கப்படாமல் உள்ளன. ஆனால் தனியார் சர்க்கரை ஆலைகள் நல்ல லாபத்தில் இயங்கி வருகின்றன. நஷ்டத்தைக் காரணம் காட்டி கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் படிப்படியாக மூடிவிடவும், அவற்றை தனியார்களுக்கு தாரை வார்க்கவும், அரசு முயற்சித்து வருவது கண்டிக்கத்தக்கதாகும். மேலும் தமிழக அரசு தேவையான நிதி ஒதுக்கி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளால் கரும்பு விவசாயிகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய நிலுவைத்தொகையினை உடனடியாக வழங்கியும், கரும்பு விவசாயிகளை ஊக்குவித்து விவசாயத்தைக் காத்திட வேண்டும்.

தமிழகத்தில் கால்நடைகள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. விவசாயிகளின் கூடுதல் வாழ்வாதாரமாக விளங்கும், கால்நடைகள் கோமாரி நோய்கள் மற்றும் பல்வேறு நோய்களால் தாக்குண்டு இறந்துவிடுவதாலும் விவசாயிகள் பெருமளவு பாதிப்புக்குள்ளாகின்றனர். மாநில அரசானது, பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் கர்நாடக மாநிலத்தில் வழங்கப்பட்டது போல் நோய்தாக்கி இறந்த கறவைப்பசு, எருமை மாடுகளுக்கு தலா ரூ.25,000ஃ-மும், ஆடுகளுக்கு தலா ரூ.15,000ஃ-மும் எவ்வித நிபந்தனையுமின்றி இழப்பீடாக வழங்கிட வேண்டும். கால்நடை மருந்தகங்கள் எண்ணிக்கையினை அதிகப்படுத்தி கால்நடைகளை நோய்தாக்குதலில் இருந்து காப்பாற்றிட வேண்டும்.

கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் செய்தது போன்று விவசயாத்திற்கு தனி பட்ஜெட் போடுவதோடு, 1மூவட்டியில் விவசயாக்கடன்கள் வழங்க வேண்டும். மேலும் பாரதிய ஜனதாகட்சி ஆட்சியில் உள்ள சட்டீஷ்கர் மாநிலத்தில் கொடுப்பது போன்று விவசாயிகளுக்கு வட்டியில்லாப் பயிர்க்கடன் வழங்க வேண்டும்.

வடகிழக்குப் பருவமழை இந்த ஆண்டும், பொய்த்துப்போகும் சூழ்நிலை உள்ளதால், குஜராத் மாநிலத்தைப் போன்ற தமிழக அரசும் விவசாய பம்பு செட்டுகளுக்கு கேட்ட உடன் மின் இணைப்பும், தடையில்லா மும்முனை மின்சாரமும் வழங்கியும், விவசாயிகளையும், விவசாயிப்பயிர்களையும் பாதுகாக்க வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

8. தமிழகத்தில் ரயில் திட்டங்கள்

தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் அக்கறை இன்மையால் நமது மாநிலத்தின் ரயில்வே திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு இல்லாமல் கிடப்பிலே போடப்பட்டுள்ளன. தென்மாவட்டங்களின் முக்கிய தேவையாக உள்ள செங்கல்பட்டு-திண்டுக்கல், மதுரை – கன்னியாகுமரி, இரட்டை ரயில் பாதை திட்டமும். பழனி – பொள்ளாச்சி – பாலக்காடு – போத்தனூர் (கோவை) மற்றும் மதுரை – போடி அகலப்பாதை மாறுதல் திட்டத்துக்கும், உடனடியாக போதிய நிதி ஒதுக்கீடு செய்து நிறைவேற்றிட வேண்டும். மேலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி தென்தமிழ்நாட்டின் புகழ்பெற்ற திருக்கோயில்களை இணைக்கும்படி பழனி – மதுரை – திருச்செந்தூர், பழனி – மதுரை – ராமேஸ்வரம் ஆகிய ரயில்களை உடனே இயக்கிட ரயில்வேத்துறை ஆவண செய்ய வேண்டும். மேலும் ராமேஸ்வரம் – கன்னியாகுமரியை நேரடியாக இணைக்கும் வகையில் ராமநாதபுரம் – ஏர்வாடி – துத்துக்குடி – திருச்செந்தூர் வழியாக உடனடியாக புதிய இரயில் பாதை அமைக்கவும் இரயில்வே துறையை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

9. வீடுதோறும் மோடி, உள்ளம் தோறும் தாமரை

திரு.நரேந்திரமோடி அவர்கள் நமது பிரதமர் வேட்பாளராக அறிவித்தவுடனும், மேலும் நாம் நடத்திய திருச்சி இளந்தாமரை மாநாட்டுக்கு திரு.மோடியின் வருகையும், ஏற்கனவே பாரதிய ஜனதாக்கட்சியின்பால் ஈர்க்கப்பட்டிருந்த தமிழக மக்கள், குறிப்பாக இளைஞர்களின் மத்தியில் ஒரு புதிய எழுச்சியையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறான இளைஞர்கள் மற்றும் புதிய ஆதரவாளர்களை கட்சியில் இணைக்கவும், கட்சியின் சின்னம், கொள்கைகள் மற்றும் திரு.வாஜ்பாயின் பொற்கால ஆட்சியின் சாதனைகள், நமது ஆட்சி நடக்கும் மாநிலங்களில் நல்லாட்சி சாதனைகளை மக்களுக்கு கொண்டு சேர்க்க, திட்டமிட்டபடி, நமது மாநில தலைவர் அவர்களின் அறிவுரைப்படி வருகிற டிசம்பர் 01-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை "வீடுதோறும் மோடி, உள்ளம் தோறும் தாமரை" என்கிற திட்டப்படி வீடுவீடாக எமது தொண்டர்கள் சந்திக்க வரும் போது தமிழக மக்கள் அதற்கு நல்லாதரவு தர வேண்டும் என்றும், ஊழலான ஆட்சிக்கு, ஊழலற்ற ஆட்சி தந்து கொண்டிருக்கின்ற திரு. நரேந்திரமோடியே மாற்று என்பதை உணர்ந்து தாமரைக்கு வாக்களிக்க உறுதியேற்ற வேண்டும் என்றும் இச்செயற்குழு வேண்டுகிறது.

கிராமிய பிரச்சார யாத்திரையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் ஒவ்வொரு தொண்டரும் தம்மை முழுமையாக ஈடுபடுத்தி, திட்டம் முழு வெற்றி அடையச் செய்ய வேண்டும் என இச்செயற்குழு சபதமேற்கிறது. தமிழக மக்கள் குறிப்பாக கிராமப்புற மக்கள் இந்த நிகழ்ச்சியில் முழுபங்களிப்பு கொடுத்து ஒத்துழைப்பு நல்கிடுமாறு இச்செயற்குழு அன்புடன் கேட்டுக்கொள்கிறது.

வணக்கத்துக்குறிய காஞ்சி சங்கராச்சாரியார் மீது வழக்குகள் போடப்பட்டது மட்டுமின்றி, மக்களால் மதிக்கப்படும் ஒரு பாராம்பரியமான ஆன்மீக மையத்தைப் பற்றி அவதூறாக பிரச்சாரம் செய்தார்கள். இன்று நீதி வென்று தருமம் மறுபடியும், வென்றிருக்கிறது. இந்த நீதிமன்ற தீர்ப்பு குறித்து இச்செயற்குழு தனது மகிழ்ச்சியை தெரிவிக்கின்றது.

நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் திருவுருவச்சிலை போக்குவரத்திற்கு இடைய+றாக இருப்பதாகச் சொல்லி அகற்றுவதற்கு தமிழக அரசு முயற்சிப்பதாக தெரிகிறது. அவருடைய சிலையை அகற்றுவதற்கு இச்செயற்குழு எதிர்ப்பு தெரிவிக்கிறது. போக்குவரத்திற்கு இடைய+ராக இருந்தால் சென்னையில் உள்ள அனைத்து சிலைகளும் அகற்றிட வேண்டியிருக்கும் என இச்செயற்குழு சுட்டிக்காட்டுகிறது.

வருகின்ற டிசம்பர் 25 அன்று பிறந்தநாள் கானும் முன்னாள் பிரதமர் வாழும் மகாத்மா திரு. அடல்பிகாரி வாஜ்பாய் அவர்கள் பல்லாண்டு காலம் நீடுழி வாழ இச்செயற்குழு இறைவனைப் பிரார்த்திக்கிறது.

Leave a Reply