லோக்சபாதேர்தலில் தமிழகத்தில் கூட்டணி அமைப்பது குறித்து பா.ஜ.க அவசரம்காட்டவில்லை, வரும் ஜனவரி மாதம் மோடி மீண்டும் தமிழகம்வருகிறார். அதன்பிறகு கூட்டணிபற்றி முடிவு செய்யப்படலாம் என்று தமிழக பா.ஜ.க தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

வீடுதோறும் மோடி, உள்ளம் தோறும் தாமரை என்றபெயரில் தமிழக பா.ஜ.க.,வினர் பாத யாத்திரையை மேற்கொள்கிந்றனர். இந்தப் பாத யாத்திரை மதுரையில் தொடங்கியது.

மதுரைபாண்டி கோவிலிலிருந்து இந்தயாத்திரையை பொன். ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில்,

நரேந்திரமோடியை மக்கள் தங்கள் பிரதமர் வேட்பாளராகவே நினைக்கின்றனர். தமிழகமக்கள் அவரை பிரதமராகவே ஏற்றுக் கொண்டுவிட்டனர். தமிழகத்தில் வரும் 22 ம் தேதிவரை நடைபெறும் இந்த "வீடு தோறும்மோடி; உள்ளம் தோறும் தாமரை' என்ற பாதயாத்திரை பிரச்சாரம் நடைபெறஉள்ளது.

இதில் 12,618 கிராம பஞ்சாயத்துக்களில், பாஜக வை சேர்ந்த தலைவர்கள், பாதயாத்திரையாக சென்று, வீடுவீடாக, மக்களை சந்திப்பர். பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை பற்றியும், அவரது நிர்வாக திறன், நேர்மை, அவரது ஆட்சிக்காலத்தில் குஜராத் மாநிலம் அடைந்துள்ள வளர்ச்சி ஆகியவற்றை, கிராமமக்களுக்கு புரியும் விதத்தில் எளிமையாக விளக்க, முடிவுசெய்துள்ளனர். இதனால் மிகப் பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும்.

ஜாதி, மொழி, இனம்கடந்து மத்தியில் பாஜக. ஆட்சி அமைக்கவேண்டும் என்பதே மக்களின் விருப்பம். நாட்டு நலனையும் தமிழகமக்களின் நலனையும் கருத்தில்கொண்டு நடைபெறும் இந்த புனிதயாத்திரையின் போது மக்களிடம் தேசத்தின் தற்போதைய நிலை, ஏன் பா.ஜ.க.,வையும் மோடியையும் ஆதரிக்கவேண்டும். என்பது போன்ற விஷயங்களை நேரடியாக சொல்வதோடு, மக்களின் தற்போதையநிலை, அவர்களின் அன்றாட வாழ்வியல் சிக்கல்கள், எதிர் பார்ப்புகள் மற்றும் தேவைகளை நேருக்குநேர் சந்தித்து அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.

மோடி பிரதமராக தமிழத்தில் அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும். தற்போது தமிழத்தில் கூட்டணி நாடி பாஜக.,வுடன் பிறகட்சிகள் பேசிவருகின்றனர். நாங்கள் தற்போது கூட்டணிக்கு அவரப்படவில்லை. வரும் ஜனவரி மாதம் மோடி மீண்டும் தமிழகம்வருகிறார். அதன்பிறகு கூட்டணிபற்றி முடிவு செய்யப்படலாம் என்றார் அவர்.

Leave a Reply