காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை சரியானதல்ல. காஷ்மீரை, ஒரு சூப்பர் மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதே பாஜக.,வின் திட்டம், பிரிவினைவாதிகள் எங்களுக்கு தேவையில்லை. என, பாஜக., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கூறினார்.

காஷ்மீர் மாநிலத்தில் முதன்முறையாக பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று பிரசாரம்செய்தார். ஜம்முவில் நடந்த கூட்டத்தில் அவர்பேசியதாவது:

தற்போது மத்தியில் ஆளும் அரசு தூங்கி கொண்டிருக்கிறது. இதேஆட்சி 2014ம் ஆண்டிலும் தேவையா ? காஷ்மீர் மாநிலத்துடன் எனக்கு நெருங்கியதொடர்பு உண்டு. இந்தியர்களான சப்ரத் சி்ங மற்றும் சமைல் சிங் ஆகியாரை கொன்றது பாகிஸ்தான் அரசு. ஆனால், பிரதமர் மன்மோகன் சிங் அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்திய அரசு குரல்கொடுத்திருந்தால், சப்ரத் சிங்கை பாகிஸ்தான் கொன்று இருக்காது. பாகிஸ்தான் விவகாரத்தில் இதுவரை மத்திய அரசு எவ்வித உரிய நடவடிக்கையும் எடுக்வில்லை

காஷ்மீர் முதல்வர் ஒமர், மாநிலத்திற்கு தன்னாட்சிகேட்கிறார். அதேவேளையில் உள்ளாட்சிகளுக்கு அடிப்படை அதிகாரங்களைகூட தர மறுக்கிறார். காஷ்மீர் மாநிலத்தில் நடக்கும் பெண்கள்மீதான தாக்குதல், கொலைகள் குறித்து பெண்கள் உரிமை அமைப்புக்கள் வாய்மூடி கிடப்பது ஏன்? இங்கு ஆளும் முதல்வரும், அவரது சகோதரியும் மற்றவர்களுக்கு உள்ள விதி முறைகளை பின்பற்றுவார்களா ?

இந்தியாவே எனதுமதம்: காஷ்மீரை பிரிக்கவேண்டும் என்பது தேவையற்றது. இந்து முஸ்லிம் என்ற வேறுபாட்டுசண்டை நமக்கு தேவையில்லை. அனைவரும்சமம் என்பதே நமக்குவேண்டும்.எனது வேதமே வளர்ச்சி பணி என்பதே, இதற்கெனவே எனது பிரார்த்தனை இருக்கும். எனக்குமதம் இல்லை, இந்தியாவே எனக்கு முதல், இந்தியாவே எனதுமதம், அதேவேளையில், காஷ்மீர் மாநிலத்தை சூப்பர்மாநிலமாக மாற்ற வேண்டியது அவசியம்,

அரசியல் சட்டபிரிவு 370, உரியநேரத்தில் திரும்பப் பெறப்படும் என்று நேரு உறுதி அளித்திருந்தார். நான் பிரதமரைகேட்கிறேன். நீங்கள் நேருவின் வழியை பின்பற்றுவீர்களா? இந்தபிரிவு குறித்து விவாதம் நடத்த வேண்டும். சிறப்பு அந்தஸ்துசட்டத்தால், ஜம்முகாஷ்மீர் மாநிலத்தை பொறுத்த வரையில், கடந்த 60 ஆண்டுகளில் குறிப்பிட்ட சிலகுடும்பங்கள் மட்டுமே பயன் அடைந்துள்ளன. சிறுபான்மையினரும், பெண்களும் தொடர்ந்து, வேறுபடுத்தப்பட்டு, அல்லலுக்கு ஆளாகிவருகின்றனர்

சட்டப்பிரிவு, 370, மூலம், காஷ்மீர் மாநிலத்துக்கு, சிலசலுகைகள் கிடைப்பதாக கூறப்படுகிறது. வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள், காஷ்மீரில் இடம்வாங்க முடியாது என்பது, இதில் உள்ள முக்கியஅம்சமாக கூறப்படுகிறது. இந்த சிறப்பு அதிகாரம் மூலம், காஷ்மீர் மாநிலத்துக்கும், அந்தமாநில மக்களுக்கும், உண்மையிலேயே, பலன்கிடைக்கிறதா என்பது, விவாதிக்கப்பட வேண்டிய விஷயம்.

ஏனெனில், நாட்டின் மற்றமாநிலங்களில், பெண்களுக்கு, ஆண்களுக்கு சம உரிமை வழங்கப்படுகிறது. ஆனால், காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்புஅதிகாரம், அந்தமாநிலத்தை சேர்ந்த பெண்களுக்கு, சமஉரிமை வழங்குவதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது.ஜம்முகாஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த பெண்கள், வேறுமாநிலங்களை சேர்ந்தவர்களை திருமணம்செய்தால், காஷ்மீரில், அவர்களின் ஓட்டுஉரிமை பறிக்கப்பட்டுவிடும். காஷ்மீர் குடியுரிமையும் பறிபோய்விடும்.இந்தமாநிலத்தின் முதல்வராக உள்ள, தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த, ஒமர் அப்துல்லா, வெளிமாநிலத்தை சேர்ந்த பெண்ணை திருமணம்செய்துள்ளார்.

இதற்காக, ஒமர் அப்துல்லாவுக்கு, மாநிலத்தில் உள்ள உரிமைகள் பறிக்கப் படவில்லை.ஆனால், ஒமர் அப்துல்லா சகோதரி சாரா, உ.பி., மாநிலத்தைச்சேர்ந்த, காங்கிரஸ் ., தலைவர்களில் ஒருவரும், மத்திய அமைச்சருமான, சச்சின்பைலட்டை, திருமணம் செய்துள்ளார். இதனால், சாராவின், காஷ்மீர் உரிமைகள் பறிக்கப்பட்டுவிட்டன.இந்த பாரபட்சம்கூடாது என்பதுதான், என் கோரிக்கை.

சீனாவில், இந்திய எல்லைக்கு அருகில்வசிக்கும் கிராமமக்களுக்கு, அந்நாட்டு அரசு, இலவசமாக, சிம்கார்டுகளைகொடுத்து, இந்திய ராணுவத்தின் நடமாட்டத்தை பற்றிய, தகவல்களை அறிந்துகொள்கிறது.மத்திய அரசும், இதேபோல், சீன எல்லைக்கு அருகில்வசிக்கும், நம் நாட்டைச்சேர்ந்த கிராம மக்களுக்கு, இது போல், சிம்கார்டு வழங்கலாமே? தொடர்ந்து நடக்கும், பயங்கரவாத சம்பவங்களால், காஷ்மீரில், சுற்றுலாதுறை பாதிக்கப்பட்டு உள்ளது என்றார்.

Leave a Reply