நிலக்கரி சுரங்க உரிமம் முறைகேட்டில் காங்கிரஸ்கட்சித் தலைவர் சோனியாகாந்திக்கும் பங்கு இருப்பதாக பாஜக மூத்த தலைவர் அத்வானி டெல்லியில் பரபரப்புகுற்றம் சாட்டியுள்ளார். நிலக்கரிசுரங்க உரிமங்கள் ஒதுக்கப்பட்டபோது அத்துறையை கவனித்துவந்த பிரதமர் மன்மோகன்சிங் சோனியாவின் கட்டளைபடியே முறைகேடுகளை நடத்தியதாக அத்வானி குற்றம்சாற்றியுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளாக இந்தியஅரசில் நேர்மையற்ற தன்மை நிலவிவருகிறது. காமன்வெல்ட் விளையாட்டு போட்டிகளில் தொடங்கிய அடுத்தடுத்து நடைபெற்றஊழல்கள் எல்லாம் வெளிச்சத்திற்கு வந்த போது ஆளும் ஐ.மு.,கூட்டணி தலைமைவகிக்கும் காங்கிரஸ்கட்சி ஊழலுக்கான பழிகளை எல்லாம் கூட்டணிகட்சிகளின் மீது சுமத்தி தப்பித்துக்கொள்ள முயற்சித்தது.

இப்போது நிலக்கரி சுரங்கஊழல் விவகாரத்தில் பிரதமரே நேரடியாக மாட்டிக் கொண்டார். இந்த ஊழலில் கூட்டணிகட்சிகளின் மீது யாரும் பழிபோடவே முடியாது.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதுகூட எங்கள் கூட்டணியை சேர்ந்தவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அப்போது எல்லாம் குற்றம் சுமத்தப் பட்டவர்கள் மீது நாங்கள் கடும் நடவடிக்கை ஏடுத்துள்ளோம்.

மத்திய அரசை தற்போது இரண்டுபேர் நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் தலைவரின் ஒப்புதலைபெறாமல் பிரதமர் மன்மோகன்சிங் எந்த முடிவையும் எடுப்பதில்லை. எனவே, நிலக்கரிசுரங்க ஊழலுக்கு பிரதமருடன் சேர்ந்து சோனியா காந்தியும் பொறுப்பேற்கவேண்டும்.

டெல்லி சட்ட சபை தேர்தலில் பாஜக. வின் 14 ஆண்டுகால வனவாசம் முடிவுக்குவரும் என்று அத்வானி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மீண்டும் -ஆட்சியைபிடிக்க நினைக்கும் காங்கிரஸின் கனவை டெல்லிமக்கள் தகர்த்து விடுவார்கள் என்று கூறினார்.

Leave a Reply