நரேந்திர மோடி மீண்டும் பீகாரில் மூன்று பொதுக்கூட்டங்களில் பேச உள்ளதாகவும், நிதிஸ் குமாரை வீழ்த்த அதிரடி வியுகம் வகுத்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

கடந்த நவம்பர் மாதம் தொடக்கத்தில் பீகார்மாநிலம் பாட்னாவில் நடந்த பிரசாரகூட்டத்தில் நரேந்திரமோடி பேசினார். அவர் பேசுவதற்குமுன் பொதுக்கூட்ட மைதானத்திலும், பாட்னா ரெயில்நிலையத்திலும் தொடர்குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதில் 6பேர் பலியானார்கள்.

இது நாடுமுழுவதும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. குண்டுவெடிப்புக்கு மத்தியில் நரேந்திரமோடி பொதுக்கூட்டத்தை ரத்துசெய்யாமல் திட்டமிட்டப்படி உரையாற்றினார்.

பாட்னா பொதுக் கூட்டத்தில் பேசிவிட்டு குஜராத் திரும்பிய நரேந்திரமோடி மீண்டும் பாட்னா சென்று குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் நேரில் ஆறுதல் கூறினார். கட்சிசார்பில் உதவி தொகையும் வழங்கினார்.

இந்நிலையில் சென்ற நவம்பர் மாதம் இறுதியில் பொதுக்கூட்டங்களில் பேசுவதாக இருந்தார். ஆனால் 5 மாநில சட்டசபை தேர்தல்கள் நடப்பதால் நரேந்திரமோடி அதில் கவனம்செலுத்தி வருகிறார். வருகிற 8–ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. அதன் பிறகு நரேந்திரமோடி பீகார் மாநிலத்தில் கவனம் செலுத்துகிறார்.

வருகிற 16–ந் தேதி முதல் பீகாரில் தீவிரவாதத்தை எதிர்த்து பாஜக சார்பில் மாநிலம்தழுவிய பிரசார கூட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளது. அதுமுடிந்ததும் பிப்ரவரியில் இருந்து மார்ச்மாதங்களில் நரேந்திர மோடி பீகார் மாநிலத்தில் முசாபர்பூர், கயா, பாகல்பூர் ஆகிய 3 இடங்களில் பொதுக் கூட்டங்களில் பேசுகிறார்.

அவர் பேசும்தேதி மற்றும் கூட்டவிவரங்கள் பற்றி கட்சி தலைமை விரைவில் முடிவு எடுத்து அறிவிக்கும் என மாநில தலைவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply