ராமர் பாலம் என்பது தேசத்தின்சொத்து. பாரம்பரியம்மிக்க வரலாற்று சின்னம். எனவே இந்தபாலத்தை பாதிக்கும் வகையில் திட்டமிடப்பட்ட சேதுசமுத்திர திட்டத்தை கைவிடவேண்டும் என்று அகில உலக விஸ்வஇந்து பரிஷத் தலைவர் சம்பத்ராய் கூறியுள்ளார்.

அகில உலக விஸ்வ இந்துபரிஷத் தலைவர் சம்பத்ராய் நேற்று கன்னியா குமரி வந்தார். கன்னியா குமரியில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது, பாபர்மஸ்ஜித் விவகாரத்தில் அலகாபாத் உயர் நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு வழங்கி உள்ளது. அந்த இடம் இந்துக்களுக்குசொந்தமானது. ஏற்கனவே அங்கு இருந்த கோவிலை இடித்து அந்தகட்டுமான பொருட்களைக்கொண்டே மசூதி கட்டப்பட்டுள்ளது. உச்ச ீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது. பாராளுமன்றத்தில் தீர்மானம் சட்டம் இயற்றி இந்தஇடத்தை இந்துக்களிடம் ஒப்படைக்கவேண்டும்.

ராமர் பாலம் என்பது தேசத்தின்சொத்து. பாரம்பரியம்மிக்க வரலாற்று சின்னம். எனவே இந்தபாலத்தை பாதிக்கும் வகையில் திட்டமிடப்பட்ட சேதுசமுத்திர திட்டத்தை கைவிடவேண்டும். இந்த விஷயத்தில் தமிழக அர்சின் அணுகுமுறையை வரவேற்கிறோம். திமுக இந்த திட்டத்தை நிறைவேற்றவேண்டும் என்று கூறுவது சுயலாபத்திற்காகவே.

வெளி நாடுகளில் வாழும் இந்துக்கள் அவர்களின் கலாச்சாரம், பாரம்பரியம்போன்றவற்றை இழக்காமல் வாழவேண்டும் என்பதற்காக விஸ்வ இந்துபரிஷத் அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 26 நாடுகளில் பணிசெய்து வருகிறது. விஸ்வ இந்து பரிஷத்-தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு 2014 ஆகஸ்ட்மாதம் முதல் 2015 ஆகஸ்ட்மாதம் வரை இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்து எழுச்சிமாநாடுகள் நடத்தப்பட உள்ளன என்றார்

Leave a Reply