வரவிருக்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் பாட்னா குண்டு வெடிப்பு குறித்து விவாதம் நடத்தவேண்டும் என்று பாஜக கோரிக்கை வைத்துள்ளது.

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் நாளைமறுநாள் தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் லோக்பால், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத் தொடர் ஆரம்பிப்பதற்குமுன்பு வழக்கமாக சபாநாயகர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும்.

அதன்படி டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டதொடர் அமைதியாக நடக்க தலைவர்கள் ஒத்துழைக்கவேண்டும் என மீராகுமார் கேட்டுக்கொண்டார். கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி மோடி பங்கேற்ற பொதுகூட்ட மைதானத்தில் 7 குண்டுகள் வெடித்தன. இதில் 7 பேர் பலியானார்கள். இதுகுறித்து விவாதம் நடத்த அனுமதிக்கவேண்டும் என பாஜக தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

Leave a Reply