தேசத் தலைவர்களின் கதாப்பாத்திரங்களில் நடித்து, மக்களின் மனங்களில் தேசப்பற்றை ஏற்படுத்தியவர் நடிகர் சிவாஜி,'' என்று பாஜக., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

மதுரையில் நாஞ்சில் இன்பா எழுதிய "தலைவன் இருக்கிறான்' என்ற புத்தகத்தைவெளியிட்டு அவர் பேசியதாவது: சிவாஜி அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்துவிட்டார். பகத் சிங், வஉசி., வீரபாண்டிய கட்டப் பொம்மன் என அவரது பலபடங்கள், தேசப்பற்றை ஏற்படுத்தியது.

அத்வானி சினிமா அதிகம் பார்க்கமாட்டார். தமிழேதெரியாத அவர் வீரபாண்டிய கட்டப்பொம்மன் படத்தை பார்த்து, கட்டப் பொம்மன் குறித்து அதிகம் தெரிந்துகொள்ள வைத்தது, சிவாஜியின் நடிப்பு. சட்ட சபை தேர்தலில், சிவாஜி நாகர் கோயிலில் போட்டியிடாதது தவறான முடிவாகிவிட்டது. இப்போது எங்கும் மக்கள்,"மோடி, மோடி' என சொல்வதுபோல், அப்போது நாகர் கோவிலில் எல்லோரது வீடுகளிலும் சிவாஜிபடம் இருக்கும். அவர் அங்கு போட்டியிட்டிருந்தால் நிச்சயம் வெற்றிபெற்றிருப்பார், என்றார்.

Leave a Reply