குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சவாலானவர் தான், எதிர்க் கட்சிகளின் பலத்தை குறைத்து மதிப்பிடவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். லோக்சபாதேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. இத்தேர்தலில் பாஜக பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டுள்ளார்.

மோடி, காங்கிரசுக்கு பெரும்சவாலாக இருப்பார் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்திருந்தார். ஆனால், மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவோ, நரேந்திரமோடியை சவாலாக கருதமுடியாது என்று கூறினார்.

இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மன்மோகன் சிங் கூறியதாவது: எதிர்க் கட்சிகளை மிகவும் சீரியசாக எடுத்துக் கொள்பவர்களில் நானும் ஒருவன். மெத்தனத்துக்கு இடமே இல்லை. எதிர்க் கட்சிகளின் பலத்தை நாங்கள் குறைத்து மதிப்பிட முடியாது. என்றார்.

Leave a Reply