முன்னாள் துணைப்பிரதர் வல்லபபாய் படேல் குறித்து கலை இலக்கிய போட்டிகளை தமிழகத்தில் நடத்த உதவிடவேண்டும் என்று தமிழக அரசிடம் குஜராத் மாநில அரசு கோரிக்கைவிடுத்துள்ளது.

குஜராத் மாநிலம் நர்மதை ஆற்றங் கரையில் முன்னாள் துணைப்பிரதமர் வல்லபபாய் படேலுக்கு 182 மீட்டர் உயர இரும்புச்சிலை அமைக்கும் பணிகளை அந்த மாநில அரசு தொடங்கியுள்ளது. இதற்காக விவசாயிகளிடம் இரும்புசேகரிக்கும் பணிக்காக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த குழுவினர் கிராமங்கள் தோறும் சென்று விவசாயிகளிடம் அவர்கள் பயன் படுத்திய இரும்பு உபகரணங்களை திரட்டும்பணியில் ஈடுபட்டுள்ளனர். இரும்புசேகரிக்கும் பணி தொடர்பாக தமிழக பா.ஜ.க மாவட்ட செயலாளர்கள் மற்றும் அது குறித்த பணியில் ஈடுபட்டுள்ள குழுவினருக்கான பயிற்சி  சென்னையில் வியாழக் கிழமை நடைபெற்றது. இதில்  குஜராத் மாநில உள்துறை இணையமைச்சர் ரஜனி காந்த் படேல், தமிழக பா.ஜ.க தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதன்பின், தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன், செய்தித்துறை அமைச்சர் கேடி.ராஜேந்திர பாலாஜி ஆகியோரை தலைமைச் செயலகத்தில் குஜராத்மாநில அமைச்சர் ரஜனி காந்த் படேல் சந்தித்து பேசினார்.

இந்தச் சந்திப்பின்போது, வல்லபபாய்படேல் குறித்து இளைஞர்களும், மாணவ-மாணவிகளும் அறிந்துகொள்ளும் வகையில் பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகளை நடத்த தமிழக அரசு உதவிடவேண்டும் என்று ரஜனி காந்த் படேல் கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக, குஜராத் முதல்வர் நரேந்திரமோடியின் வேண்டுகோள் கடிதத்தையும் அவர் அளித்துள்ளார்.

Leave a Reply