முன்னாள் முதல்வர் எடியூரப்பா, இன்னும் ஒரு வார காலத்தில் மீண்டும் பா.ஜ.க.,வில் இணைவார் என முன்னாள் முதல்வர் சதானந்த கௌடா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது : முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை பா.ஜ.க.,வில் மீண்டும் சேர்த்துக் கொள்வது தொடர்பாக கட்சிமேலிடத்திடமிருந்து சாதகமான சமிக்ஞைகள் கிடைத்துள்ளன.

இன்னும் ஒரு வாரகாலத்தில் எடியூரப்பா, பா.ஜ.க.,வில் இணைவார். எடியூரப்பாவை பா.ஜ.க.,வில் மீண்டும் சேர்த்துக் கொள்வது குறித்து மாநிலத்தலைவர்கள் கட்சி மேலிடத் தலைவர்களை சந்தித்து சாதக பாதகங்களை விளக்கியுள்ளனர். பா.ஜ.க தேசியத் தலைவர் ராஜ்நாத்சிங் தவிர, எல்கே.அத்வானி, நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களிடம் இது குறித்து பேசப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கட்சியில் கருத்து வேறுபாடுகள் இல்லை. எடியூரப்பாவை பா.ஜ.க.,வுக்கு அழைத்து வந்து, கட்சியை பலப்படுத்துவதே எங்கள் நோக்கம். இன்னும் ஒரு வாரத்தில் இது நடக்கும் என்றார் அவர்.

Leave a Reply