ஒருபரம்பரையை மட்டுமே நம்பியிருப்பது அரசியலில் நீண்டகாலம் பலன் அளிக்காது, காங்கிரஸ் தோளிவ் பயத்தில் நம்பிக்கை இழந்தும் கட்டுப்பாட்டை இழந்தும் காணப்படுகிறது என்று பா.ஜ.க மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க் கட்சி தலைவருமான அருண்ஜேட்லி கருத்து தெரிவித்துள்ளார்.

சி.என்.என் ஐ.பி.என், சி.எஸ்.டி.எஸ், திவீக் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில், நான்கு மாநிலத்துலுமே பாஜக ஆட்சி அமையும் என்று தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில் அருண் ஜேட்லி கூறியதாவது “வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துகணிப்புகளுக்கும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதனால் சிறியளவில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளன. ஆனால், அதேசமயம் தேர்தல் முடிவுகளின் நிலவரத்தை ஓரளவு அதன்மூலம் கணிக்கமுடியும்.

தற்போது நடைபெற்றுள்ள சட்டமன்ற தேர்தல்களின் கருத்துக்கணிப்புகள் காங்கிரஸுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அந்த கட்சி நம்பிக்கை இழந்தும், கட்டுப்பாட்டை இழந்தும் காணப்படுகிறது. இப்போதே இப்படி என்றால், தேர்தல்முடிவுகள் வெளியானபின்பு அந்தகட்சியின் நிலை எப்படி இருக்குமோ தெரியவில்லை.

ஒருபரம்பரையை மட்டுமே நம்பியிருப்பது அரசியலில் நீண்டகாலம் பலன் அளிக்காது. காங்கிரஸ் கட்சியினர் தங்களைத் தாங்களே கேள்வி கேட்டுக்கொண்டு, விடைதேட வேண்டிய நேரம் இது” என்றார்.

Leave a Reply