நடைபெற உள்ள லோக்சபாதேர்தலில் பாஜக அமோக வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றும், குஜராத் மாநிலத்தில் எல்லா மக்களுக்கும் பாகுபாடு இல்லாத ஆட்சி நடந்துவருகிறது என்று பாஜக.,வை சேர்ந்தவரும் முன்னணி நடிகருமான எஸ்.வி.சேகர் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் மேலும் தெரிவித்ததாவது நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் பாஜக வெற்றி பெறும். பா.ஜ.க மதவாத கட்சியல்ல. ஒழுக்கம், ஆன்மிகம், தேசியம் ஆகியவற்றை குறிக்கோளாககொண்டு செயல்பட்டு வருகிறது. குஜராத் மாநிலத்தில் எல்லா மக்களுக்கும் பாகுபாடு இல்லாத ஆட்சி நடந்துவருகிறது. இதனால் அங்குள்ள முஸ்லிம்களும் பாஜக வை ஆதரிக்கின்றனர். ஆனால் காங்கிரஸ் மட்டும் மோடியை மதவாதியாக சித்தரிக்கிறது. அது உண்மையும் அல்ல . என்றார்

Leave a Reply