புதுடெல்லியில் முதலமைச்சர் ஷீலா தீட்சித்தைவிட கெஜ்ரிவால் 7000 ஓட்டுகள் அதிகம் பெற்று முன்னணியில் உள்ளார். 15 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த ஷீலாதீட்சித் இந்த தொகுதியில் 9 மாதங்களுக்கு முன் ஆம்ஆத்மி கட்சியை ஆரம்பித்த அரவிந்த் கெஜ்ரிவாலிடம் தோல்வி அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
.

70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்ட மன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ்கட்சி 4வது முறையாக ஆட்சியை கைப்பற்ற முயற்சிசெய்தது. முதலமைச்சர் ஷீலாதீட்சித் 3 முறை வெற்றி பெற்று 15 ஆண்டுகளாக முதலமைச்சராக உள்ளார். இன்று காலை வாக்கு எண்ணிக்கைதொடங்கிய உடனேயே பிஜேபி அதிக இடங்களில் முன்னணியில் இருந்து வருகிறது.

Leave a Reply