நாடுமுழுவதும் மோடி அலை வீசுகிறது. காங்கிரசுடன் கூட்டுவைக்கும் கட்சிகளும் அழிந்துபோகும்,'' என மாநில பாஜக., தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

நான்கு மாநில சட்ட சபை தேர்தல்களில், பாஜக, வெற்றிபெற்றதை தொடர்ந்து, நாகர் கோவிலில் தொண்டர்களுக்கு இனிப்புவழங்கி, அவர் கூறியதாவது: தேர்தல்முடிவுகள் மோடி அலை வீசுகிறது என்பதை உணர்த்துகிறது. பார்லி., தேர்தலிலும் இதுதான் எதிரொலிக்க போகிறது.

டில்லி தமிழர்களாக இருந்தாலும், யாராக இருந்தாலும், மோடியை பிரதமராகபார்க்க வேண்டும் என விரும்புவதை, கேப்டன் புரிந்துகொண்டு, மோடி தலைமையில் ஆட்சி அமைய துணை நிற்கவேண்டும். காங்கிரஸ் சரித்திரதோல்வியை சந்தித்துள்ளது. இனி, அந்த கட்சியுடன் கூட்டுவைக்கும் கட்சிகளும் அழிந்து போகும். ஏற்காட்டில் அதிமுக., வெற்றி, எதிர்பார்த்ததுதான். அந்த வெற்றிக்கு வாழ்த்துதெரிவிக்கிறேன், என்றார்.

Tags:

Leave a Reply