70 தொகுதிகள்கொண்ட டெல்லி சட்ட சபைக்கு கடந்த 4-ம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் டெல்லியில் தொடர்ந்து மூன்றுமுறை ஆட்சிசெய்த ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸ் கட்சி வெறும் 8 தொகுதிகளில் மட்டும்வென்று படுதோல்வி அடைந்தது.

பா.ஜ.க.,வுக்கு 32 தொகுதிகளும், முதல்முறையாக தேர்தல்களத்தை சந்தித்த ஆம் ஆத்மிகட்சிக்கு 28 இடங்களும் கிடைத்தன. இதையடுத்து யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால், அங்கு ஆட்சிஅமைப்பதில் குழப்பம் நிலவிவருகிறது.

இந்நிலையில், ஆம் ஆத்மிகட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நாங்கள் எதிர்க்கட்சியாக அமர்கிறோம். இல்லையேல், மறு தேர்தலை சந்திக்கிறோம் என்று கூறிவருகிறார். பாஜக .,வும் எதிர்க்கட்சியாக உட்கார விரும்புவதாக கூறியுள்ளது.

இதுகுறித்து சமூகசேவகரும் முன்னாள் ஐபிஎஸ். அதிகாரியுமான கிரண்பேடி கூறியதாவது:-

தலைநகர் டெல்லியில் நல்லாட்சி கொடுக்கவேண்டிய பொறுப்பு பாஜக.,வுக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் இருக்கிறது. இருந்தும் அவர்களிடம் ஆட்சி அமைப்பதற்கான தனிப் பெரும்பான்மை இல்லை. டெல்லிக்கு நிலையான ஆட்சி அமையாத சூழ்நிலை உருவாகி மறுதேர்தலை சந்திப்போம் என்று அவர்கள் கூறுவது துரதிருஷ்டமே.

எனவே, இரு கட்சித் தலைவர்களும் ஒன்றிணைந்து டெல்லியில் ஒரு புதுமாதிரியான ஆட்சி அமைத்து இந்த சிக்கலான நிலைமைக்கு முடிவுகட்ட வேண்டும். பாஜக.,வும் ஆம் ஆத்மி கட்சியும் வாக்காளர்களை மதித்து ஒன்றிணையவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இரு கட்சிகளும் ஒருவருடன் ஒருவர் பேசவேண்டும். இருகட்சிகளும் ஒன்றிணைந்து நல்லாட்சி தரவே டெல்லிமக்கள் விரும்புகின்றனர். என்று அவர் கூறினார்.

Leave a Reply