டெல்லி சட்டப் பேரவை தேர்தலில் அதிக இடங்களை கைபற்றிய பா.ஜ.க ஆட்சிஅமைக்க முன்வரவேண்டும் என ஆம்ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். ஆம்ஆத்மி கட்சியின் சட்டப்பேரவையின் உறுப்பினர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்

ஆம்ஆத்மி கட்சியின் சட்டப்பேரவை தலைவராக அரவிந்த் கெஜ்ரிவால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதிக இடங்களை மக்கள் அளித்துள்ள நிலையில் பொறுப்புகளை தட்டி கழிக்காமல் பாஜக ஆட்சியமைக்க முன்வரவேண்டும் என்று கூறினார்.

டெல்லியில் மொத்தம் உள்ள 70 தொகுதியில் 31 இடங்களில் பாஜக வெற்றிபெற்றுள்ளது. ஆம்ஆத்மி கட்சி 28 இடங்களில் வென்று 2வது இடத்தை பெற்றுள்ளது.

காங்கிரசு 8 இடங்கள்மட்டுமே கிடைத்துள்ளன. ஐக்கிய ஜனதா தளம், அகாலிதளம், மற்றும் ஒருசுயேட்சை ஆகியோர் ஒரு இடங்களில் வென்றுள்ளனர். இதனால் அதிக இடங்களை கைபற்றியுள்ள பாஜக-வை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார் என்று கூறப்படுகிறது.

இதனை பாஜக நிராகரிக்கும்பட்சத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆளுநர் அழைப்புவிடுப்பர் எனத்தெரிகிறது. எந்த கட்சியும் ஆட்சி அமைக்கா விட்டால் சட்டப் பேரவையை சஸ்பெண்ட்செய்து ஆளுநர் உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அளிப்பார் என்றும் டெல்லிவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply