மத்திய பிரதேச முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் நேற்று (சனிக் கிழமை) பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் ராம்நரேஷ் யாதவ் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். மத்திய பிரதேசத்தில் மூன்றாவது முறையாக முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் ஆட்சியை கைப்பற்றியுள்ளார்.

போபாலில் நடைபெற்ற விழாவில், பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, மூத்த தலைவர் எல்கே. அத்வானி, தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மத்திய பிரதேச மாநில சட்ட சபைத் தேர்தலில், மொத்தமுள்ள 230 தொகுதிகளில் பாஜக 165 தொகுதிகளிலும், காங்கிரஸ் 58 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply