மக்களவைதேர்தலில் போட்டியிட கிரிக்கெட்வீரர் சவுரவ் கங்குலிக்கு நரேந்திரமோடி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியகிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ்கங்குலியை மக்களவை தேர்தலில் போட்டியிட பாஜக பிரதமர் வேட்பாளர்

நரேந்திரமோடி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளது. மேலும், தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றால் கங்குலிக்கு பொறுப்பு வழங்கப்படும் என்று உறுதி தந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கங்குலியும் இந்த தகவலை உறுதி படுத்தியுள்ளார் .

கொல்கத்தாவிலுள்ள தனியார் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், தனக்குவந்த அழைப்பு உண்மை தான் . ஆனால் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவுசெய்யவில்லை என்றும் அவர் கூறினார். மேலும், இது குறித்து விரைவில் தனதுமுடிவை அறிவிப்பேன் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply