பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் பா.ஜ.க தலைமையில் பல்வேறுகட்சிகளை சேர்த்து கூட்டணி அமைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.

காந்தியமக்கள் இயக்க தலைவர் தமிழருவிமணியன் இதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார். பா.ஜ.க கூட்டணியில் மதிமுக. பாமக., தேமுதிக. உள்ளிட்ட பல கட்சிகளை சேர்க்கும் முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் பா.ஜனதா கூட்டணியில் அனைத்து இந்திய முஸ்லிம்முன்னேற்ற கழகம் சேர்ந்துள்ளது. இந்த கட்சியின் தலைவர் சதக்கத் துல்லா, சென்னை பா.ஜ.க அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ.க தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் தனது கட்சியின் ஆதரவுகடிதத்தை வழங்கினார்.

இது குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜ.க தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணியில் சதக்கத்துல்லா தலைமையிலான அனைத்து இந்திய முஸ்லிம்முன்னேற்ற கழகம் இணைந்துள்ளது. வரும் பாராளுமன்றதேர்தலில் நரேந்திரமோடிக்கு ஆதரவாக முஸ்லிம்மக்களிடம் அவர்கள் ஆதரவு திரட்டுவார்கள் என்றார்.

தமிழ்நாட்டில் முதல்முறையாக முஸ்லிம் கட்சி ஒன்று பா.ஜ.க.,வுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது போலி மதச்சார்பின்மை வாதிகளின் முகத்தில் பூசப்பட்ட காரியாகவே காட்சி தருகிறது .

Leave a Reply