சர்தார் பட்டேலின் முக்கியத்துவத்தை விளக்கும்வகையில் இந்தியா முழுவதும் இன்று 1500 இடங்களில் ஒற்றுமை ஓட்டம் நடைபெறுகிறது . தமிழகத்தில் 64 இடங்களில் நடக்கிறது.

குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் சர்தார்வல்லபாய் பட்டேலுக்கு உலகிலேயே மிகஉயரமான சிலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சிலை அமைப்பதற்கு தேவையாக இரும்பு கிராமத்து விவசாயிகளிடமிருந்து சேகரிக்கப்பட்டுவருகிறது. மேலும், மீனவர் கிராமத்தில் இருந்து நங்கூரம்சேகரிக்கப்பட்டு வருகிறது. சிலை அமைப்பது தொடர்பாக நாடுமுழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாகவும், பட்டேலின் நினைவுநாளான 15ம் தேதி அவருக்கு அஞ்சலிசெலுத்தும் வகையிலும், அவரின் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துரைக்கும்வகையிலும் அன்று காலை 8 மணிக்கு இந்தியாமுழுவதும் 1,500 இடங்களில் ஒற்றுமை ஓட்டம் நடை பெறுகிறது.

தமிழகத்தில் மட்டும் 64 இடங்களில் ஒற்றுமைஓட்டம் நடக்கிறது. குஜராத்தில் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடி ஓட்டப் பந்தயத்தை தொடங்கி வைத்து 2 கிலோமீட்டர் தூரம் ஓடுகிறார். சென்னையில் மெரினா கடற்கரை கண்ணகிசிலையில் இருந்து கலங்கரை விளக்கம்வரை ஒற்றுமை ஓட்டம் நடைபெறுகிறது. இதில் தேசியசெய்தி தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்வழங்கப்படும். எனவே, மாணவ-மாணவிகள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும்

Leave a Reply