தமிழகத்தில் அதிமுக., திமுக. அல்லாத ஒரு புதியகூட்டணியை பாஜக தலைமையில் உருவாக்க முயற்சி செய்துவருகிறோம் என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

பாஜக சார்பில் 'இல்லம் தோறும் மோடி உள்ளம் தோறும் தாமரை' என்ற வாசகத்துடன் கிராமயாத்திரை நடந்து வருகிறது . சென்னை மேடவாக்கத்தில் நடந்த யாத்திரையின் நிறைவு நாள் நிகழ்ச்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு இல.கணேசன் பேசியதாவது:-

தமிழகத்தில் அதிமுக., திமுக. இல்லாத ஒரு புதியகூட்டணியை பாஜக தலைமையில் உருவாக்க முயற்சிசெய்து வருகிறோம். இந்தகூட்டணியில் மதிமுக. உள்பட பலகட்சிகள் சேர உள்ளன. இதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.

காங்கிரஸ் ஆட்சியில் விலைவாசி உயர்வு, ஊழல் மலிந்துவிட்டது. பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி குஜராத் மாநிலத்தில் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். நதிகளை இணைத்து விவசாயவளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக உள்ளார்.

நரேந்திரமோடி பதவி ஏற்றதும் போட உள்ள முதல்கையெழுத்து, சுவிஸ் வங்கியில் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புபணத்தை வெளியே கொண்டுவருவதற்கான கையெழுத்தாகத் தான் இருக்கும் என்றார்.

Leave a Reply