திமுக எந்தகட்சியுடன் கூட்டணி வைத்தாலும், பா.ஜ.க.,வை அது பாதிக்காது என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் மேலும் அவர் தெரிவித்ததாவது,

பா.ஜ.க எதைப் பற்றியும் கவலைபடவில்லை. பா.ஜ.க.,வுக்கு தமிழகத்தில் மிகப் பெரிய வரவேற்பு உள்ளது . மோடி அலை தமிழகம் எங்கும் வீசிக் கொண்டிருக்கிறது. ஆகவே தமிழகத்தில் பா.ஜ.க மிகப் பெரிய வெற்றியைபெறும். பா.ஜ.க ஆட்சி, மோடி ஆட்சிவருவது உலகத் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் நன்மையாக அமையும்.

திமுக.வை பொறுத்த வரை தேவையென்றால் கூட்டணி வைத்துகொள்வார்கள், வேண்டாம் என்றால் முறித்துகொள்வார்கள். அந்த முடிவைதான் இப்போது எடுத்துள்ளனர். தி.மு.க எந்தக்கட்சியுடன் கூட்டணி வைத்தாலும், அது பாஜக.,வை பாதிக்காது

பா.ஜ.க கூட்டணி பற்றி கவலைபடவில்லை யாருடன் கூட்டணிசேர்ந்தாலும் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க வெற்றிபெறுவது உறுதி.

4 மாநிலதேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததுகூட திமுக.வின் இந்தமுடிவுக்கு காரணமாக இருக்கலாம். பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க கூட்டணிக்கு மகத்தான வெற்றிகிடைக்கும் என்றார்.

Leave a Reply