விசா மோசடிப் புகார் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட இந்தியப் பெண்தூதரக அதிகாரி தேவயானி கோப்ரகடேவின் ஆடையை அவிழ்த்து அதிகாரிகள் சோதனையிட்டசெயல் இருநாடுகளிடையிலான உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

இந்தவிவகாரத்தை சீரியஸாக எடுத்துக் கொண்டிருப்பதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆடையை அவிழ்த்து சோதனையிட்டது மட்டுமல்லாமல், அவரை போதைப்பொருள் குற்றவாளிகளுடன் அமரவைத்தும் அவமானப்படுத்தி யுள்ளனர் அமெரிக்க அதிகாரிகள். நியூயார்க்கில் உள்ள இந்தியத் துணைத்தூதரகத்தில் துணைத் தூதராக இருப்பவர் தேவயானி. இவர் விசாமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தனது குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்துவருவதற்காகப் போயிருந்தபோது சாலையில் வைத்து இவரைக் கைதுசெய்த அதிகாரிகள், கை விலங்கிட்டு அழைத்துச்சென்ற செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் இந்தசெயலுக்கு வழக்கம்போல கண்டனத்துடன் இந்தியா அமைதி காத்துவருகிறது. கடுமையான எச்சரிக்கையோ அல்லது அதிரடிநடவடிக்கை எதையுமோ இதுவரை இந்தியா எடுக்கவில்லை.

தேவயானியிடம் அமெரிக்க அதிகாரிகள் டி.என்.ஏ சோதனை எடுத்துள்ளனர். இந்தவிவகாரம் தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில்தான் தேவயானியின் ஆடையை அவிழ்த்து அமெரிக்கஅதிகாரிகள் அத்துமீறி நடந்துகொண்ட செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேவயானி விவகாரத்தை தொடர்ந்து, இந்தியாவந்துள்ள அமெரிக்க எம்பி.,க்கள் குழுவை சந்திக்க லோக்சபா சபாநாயகர் மீராகுமாரும், தேசிய பாதுகாப்புஆலோசகர் எஸ்எஸ்.மேனனும் மறுத்துள்ளனர். தேவயானி விவகாரம்தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், வியன்னா உடன்படிக்கையின் 40 வது பிரிவை அமெரிக்காமீறியுள்ளது. இது மிகவும் கவலைக்குரியது, கண்டனத்துக்குரியது. தேவயானி ஒருதூதரக அதிகாரி என்பது தெரிந்தும்கூட இப்படி நடந்து கொண்டுள்ளது வருத்தம்தருகிறது. அதிர்ச்சி அளிக்கிறது. வேண்டும் என்றே அவர்கள் இப்படிநடந்துள்ளனர் என்றனர்.

Leave a Reply