இந்தியத் துணைத்தூதர் தேவ்யானியை அமெரிக்க போலீஸார் கைதுசெய்து, ஆடைகளை களைந்தும் சோதனைசெய்த செயலுக்கும் கடும் எதிர்ப்புதெரிவிக்கும் வகையில், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடனான சந்திப்பை குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, ஆகியோர் ரத்துசெய்து விட்டனர்.

இது குறித்து டிவிட்டரில் அவர்வெளியிட்ட செய்தியில், நம் நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதி்ப்பளித்தும், அவர்களுக்கு துணையாகவும், நமது தூதருக்கு அமெரிக்காவில் நடந்த அவமரியாதைக்கு எதிர்ப்புதெரிவிக்கும் வகையிலும் இந்தசந்திப்பை நான் நிராகரித்துவிட்டேன் என்று கூறியுள்ளார். ஆனால் இந்த காரணத்திற்காகத் தான் ரத்து என்று ராகுல்காந்தியும், ஷிண்டேயும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. மாறாக, நாடாளுமன்ற பணிகளில் பிசியாக இருந்ததால் இவர்கள் சந்திக்க வில்லை என்று அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply