மத்திய பிரதேசத்தில் இனி புது மது ஆலைகளுக்கோ , மது கடைகளுக்கோ அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இந்தூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்திருப்பதாவது:- சில நாட்களுக்கு முன் மத்திய பிரதேச மாநிலத்தில் புதியமது ஆலை அமைக்க அனுமதிவழங்கும்படி 2 பிரபல நிறுவனங்கள் அரசிடம் விண்ணப்பித்தன. அந்த விண்ணப்பங்களை தூக்கி குப்பைகூடையில் போடும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன்.

புதிய மது ஆலைகளை அமைக்க அனுமதி வழங்குவதில்லை என்பதில் எனதுஅரசு உறுதியுடன் உள்ளது. அதேபோல் மாநிலத்தில் புதிய மதுக் கடைகள் திறப்பதற்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது. மதுவின் தீமையில் இருந்து மக்கள் விடுபடுவதற்கான தீவிரபிரச்சாரம் மாநில அரசின் சார்பில் நடத்தப்படும். பின்னர், படிப்படியாக மாநிலத்தில் தற்போதுள்ள மதுக்கடைகளின் எண்ணிக்கையும் குறைக்கப்படும் என்றார்.

Leave a Reply