பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை விமர்சனம் செய்துள்ள மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்க்கு பாஜக கடும்கண்டனம் தெரிவித்துள்ளது.

சில தினங்களுக்குமுன்பு உத்தரகண்ட் மாநிலத்தில் தேர்தல்பிரசார கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த பாஜக அரசு கொண்டுவந்த லோக் அயுக்தா சட்டத்தை காங்கிரஸ் அரசு அமல்படுத்தாது ஏன் என கேள்விஎழுப்பினார். இதற்கு மத்திய அமைச்சர் ரமேஷ் லோக் அயுக்தா குறித்து நரேந்திரமோடி பேசுவது, பெண்களின்கற்பு குறித்து சாமியார் அசராம்பாபு பேசுவது போல் இருக்கிறது என்று விமர்சனம் செய்தார்.

இதற்கு பாஜக கடும்கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் செய்திதொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையில், ரமேஷின் ஒப்பீடு அருவருப்பானது. அவரது அழுக்குவிமர்சனத்தை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். இது வெட்கக் கேடானது என்றார்.

Leave a Reply