சமீபத்தில் நடந்து முடிந்த நான்குமாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் படு தோல்வி அடைந்ததை போன்று மக்களவைத் தேர்லிலும் இரு இலக்கங்களுடன் தோல்வியடையும் என்று பா.ஜ.க.,வின் மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார்.

டெல்லி, சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ்கட்சி தோல்வியை தழுவியது.

இது குறித்து அத்வானி தனது வலைப்பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது:

“சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றதேர்தலில் காங்கிரஸ் கட்சி வாக்காளர்களை விலைக்குவாங்க முயன்றது. குறிப்பாக, ராஜஸ்தான் தேர்தலுக்கு முன் வாக்காளர்களைக்கவர பல திட்டங்கள் போடப்பட்டன. ஆனால், அவசர நிலை கால கட்டத்திற்கு பின், சட்டமன்றதேர்தலில் அக்கட்சிக்கு ஏற்பட்ட மிகமோசமான தோல்வி இதுவே ஆகும்.

வரும் 2014 மக்களவை தேர்தலின் போது காங்கிரஸ்கட்சி இரு இலக்கங்களில் வாக்குகள் பெற்றால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை என்று என் முந்தைய வலைப் பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

முக்கியமான சட்டமன்றதேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்தாண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தல் சோனியாகாந்தி-மன்மோகன்சிங் அரசின் தலைவிதி தீர்மானிப்பதில் அதிமுக்கியபங்கு வகிக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

காங்கிரஸ் அவரசநிலை கால கட்டத்திற்கு பின் நடந்த தேர்தலைப்போலவே தான், நடக்கவிருக்கும் மக்களவைதேர்தலிலும் தோல்வியை சந்திக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply