தில்லியில் மறுதேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாக தில்லி பிரதேச பா.ஜ.க தலைவர் விஜய்கோயல்.தெரிவித்துள்ளார் மேலும், கட்சியினர் தொகுதிகளுக்கு சென்று தேர்தல்பணிகளை தொடங்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: “வேஷம் கலைந்து விடுமோ என்ற அச்சத்தில் ஆட்சியமைக்க மறுத்து வரும் ஆம் ஆத்மிகட்சியால், தில்லியில் இன்னொருதேர்தல் வர உள்ளது. அந்த தேர்தலை சந்திக்க பாஜக தயாராகவே உள்ளது. பாஜக தொண்டர்கள் மக்களிடம்சென்று தேர்தல் பணிகளை தொடங்கவேண்டும்.

தேர்தல் பிரசாரத்தை மூன்றுவழிகளில் மேற்கொள்ள இருக்கிறோம். நவீன ஊடகங்கள், பொதுக் கூட்டங்கள் மற்றும் வீடு, வீடாகச்சென்று வாக்கு சேகரிப்பது ஆகியவற்றை செய்ய உள்ளோம் . பாஜக வெற்றிபெற்ற தொகுதிகளில் கட்சியினர் வெற்றிக்கூட்டங்கள் நடத்துவார்கள். தோல்வியடைந்த தொகுதிகளில் நன்றிதெரிவிக்கும் கூட்டங்களை நடத்துவார்கள்.

இளைஞர்கள் மற்றும் மகளிர்நலன்களில் மேலும் சிறப்புக்கவனம் செலுத்தும் வகையில், கட்சியில் உள்ள இளைஞர், மகளிர் பிரிவினரின் செயல்பாடுகளை அதிகப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்க்கொள்வோம்’ என்று விஜய்கோயல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply