பாராளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேறிய ஊழலுக்கு எதிரான லோக்பால்மசோதா, மக்களவையிலும் நிறைவேறியது. கடும்கூச்சல், குழப்பங்களுக்கு மத்தியில் , சமாஜ்வாடி கட்சியின் கடும் எதிர்ப்பையும்மீறி மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

ஊழலுக்கு எதிரான வலுவானலோக்பால் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம்காட்டியது. டெல்லி மேல் சபையில் திருத்தப்பட்ட லோக்பால் மற்றும் லோக் அயுக்தா சட்ட மசோதா கடந்த 13 ஆம்தேதி தாக்கல் செய்யப்பட்டது. 5 மணிநேர விவாதத்திற்கு பிறகு லோக்பால் மசோதா டெல்லி மேல் சபையில் நேற்று நிறைவேறியது. சமாஜ்வாடி கட்சியைதவிர மற்ற அனைத்து கட்சிகளும் இந்தமசோதாவுக்கு ஆதரவு அளித்தன.

திருத்தப்பட்ட லோக்பால்மசோதா பாராளுமன்றத்தில் இன்று தாக்கல்செய்யப்பட்டது. இன்று மதியம் 12 மணிக்கு பிறகு இதன்மீதான விவாதம் தொடங்கியது. ஜனநாயகத்தை அழித்திடாத லோக் பால் அவசியம். இந்த மசோதாவை முன்கூட்டியே தாக்கல்செய்து இருக்க வேண்டும். பாராளுமன்றத்தின் முடக்கத்துக்கு மத்திய அரசு தான் காரணம்.

லோக்பால் மசோதாவை நிறைவேற்றவிடாமல் காங்கிரஸ் கூட்டணிகட்சிகள் தடுக்கின்றன. பாஜக.வின் முயற்சியால் தான் மேல்சபையில் இந்தமசோதா நிறைவேறியது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள இந்த மசோதாவில் 2 முக்கியபரிந்துரைகள் இல்லை என்று சுஷ்மா பேசினார்.

Leave a Reply