வலுவான லோக் பால் மசோதாவை கொண்டுவர தொடர்ந்துபோராடி வரும் அண்ணா ஹசாரேவுக்குதான், இந்த லோக்பால் மசோதா நிறைவேற்றப்படுவதற்கான பாராட்டுக்கள் சென்றுசேரும் என மக்களவையில் எதிர்க் கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.

மக்களவையில் இன்று லோக்பால்மசோதா மீதான விவாதத்தில் பேசிய சுஷ்மா, மாநிலங்களவையில் வலுவான லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு பா.ஜ.க மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. இதற்கு அண்ணா ஹசாரேவுக்கும், லோக் பாலுக்கு ஆதரவு அளித்த இந்தியகுடிமக்களுக்குமே பாராட்டுகள் சென்றுசேரும்.

இந்திய மக்களின் விருப்பதை நிறைவேற்றும் வகையில் ஊழலை ஒழிக்க வலிமையானலோக்பால் மசோதா அவசியம். அதனை மாநிலங்களவையில் நிறைவேற்றியிருப்பது மகிழ்ச்சி தருகிறது என்றும் அவர் கூறினார்.

Leave a Reply